» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
அரசினர் கூர்நோக்கு இல்லத்தில் ரூ.80 இலட்சம் மதிப்பில் புதிய கட்டிடங்கள் திறப்பு விழா!
திங்கள் 13, அக்டோபர் 2025 4:10:26 PM (IST)

திருநெல்வேலி அரசினர் கூர்நோக்கு இல்லத்தில் ரூ.80 இலட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார், குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார்.
18 வயதிற்குட்பட்ட சிறார்கள் செய்யும் குற்றங்களுக்காக, அவர்களின் எதிர்காலத்தை சீர்படுத்தும் நோக்கில் அரசால் அரசினர் கூர்நோக்கு இல்லங்கள் நடத்தப்பட்டு வருகிறது. மேலும், அவர்களுக்கு உணவு, உடை, இருப்பிடம் மற்றும் கல்வி வழங்கப்பட்டு, நல்வழிப்படுத்துதல் பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த இல்லங்களில் சிறார்களின் உளவியல் தேவைகளைக் கருதி, சமூகப் பணியாளர்கள் மற்றும் உளவியல் ஆலோசகர்கள் மூலம் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதல் வழங்கப்படுகிறது.
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் 21.06.2024 அன்று நடைபெற்ற 2024-2025-ம் ஆண்டிற்கான சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் மானியக் கோரிக்கையின் போது, திருநெல்வேலி அரசினர் கூர்நோக்கு இல்லங்கள் பார்வையாளர் / நேர்காணல் அறைகள் மற்றும் வாயிற்காவலர்களின் பயன்பாட்டிற்கு தனியாக கழிவறை வசதிகளுடன் கூடிய அறை கட்டப்படும் என அறிவித்தார்கள்.
அதனைத்தொடர்ந்து, ரூ.80 இலட்சம் மதிப்பில் திருநெல்வேலி அரசினர் கூர்நோக்கு இல்லத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள பார்வையாளர் / பெற்றோர் நேர்காணல் அறை, பல்நோக்கு அறை, வகுப்பறை மற்றும் வாயிற்காவலர் அறை இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. இக்கூர்நோக்கு இல்லமானது குற்றச் செயல்களில் ஈடுபடும் சிறார்களை நல்வழிப்படுத்துவதே முக்கிய நோக்கம். அவர்களுக்கு கல்வி, வாழ்வாதாரப் பயிற்சி மற்றும் மனநல ஆலோசனை வழங்குவதன் மூலம், சமூகத்தில் நல்ல குடிமக்களாக வாழ்வதற்குத் தேவையான திறன்களை வளர்க்க உதவுகின்றனர்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அருள்செல்வி, அரசினர் கூர்நோக்கு இல்ல கண்காணிப்பாளர் யோவான், இளைஞர் நீதிக்குழுமம் உறுப்பினர்கள் ஆரோக்கியமேரி, கிருபாவதி, நன்னடத்தை அலுவலர், பொதுப்பணித்துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பொங்கல் பரிசாக ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் : அரசுக்கு நயினார் நாகேந்திரன் வேண்டுகோள்
வெள்ளி 28, நவம்பர் 2025 12:16:08 PM (IST)

கருமேனியாறு நீர்த்தேக்கத்திலிருந்து தண்ணீர் திறந்து வைத்தார் சபாநாயகர் மு.அப்பாவு..!
வெள்ளி 28, நவம்பர் 2025 11:28:14 AM (IST)

தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடத்தி வந்த வாலிபர் கைது
வெள்ளி 28, நவம்பர் 2025 8:38:33 AM (IST)

தென்காசியில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா : திமுக வழக்கறிஞர்கள் கொண்டாட்டம்!
வெள்ளி 28, நவம்பர் 2025 7:52:04 AM (IST)

அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணி இடங்கள் - விண்ணப்பங்கள் வரவேற்பு!
வியாழன் 27, நவம்பர் 2025 5:06:22 PM (IST)

குழந்தை திருமணத்திற்கு எதிரான உறுதிமொழி ஏற்பு
வியாழன் 27, நவம்பர் 2025 4:24:35 PM (IST)




