» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

காவல் நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் மேலும் இருவர் கைது

புதன் 15, அக்டோபர் 2025 12:53:23 PM (IST)

தச்சநல்லூர் காவல் நிலையம் உள்பட 4 இடங்களில் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் மேலும் இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். 

நெல்லை தச்சநல்லூர் போலீசார் கடந்த சில நாட்களுக்கு முன்பு ராஜவல்லிபுரத்தை சேர்ந்த அருண்குமார் (35) உள்பட 2 பேரை கைது செய்தனர். இதனை அறிந்த அருண்குமாரின் தம்பியான அஜித்குமார் (30) தனது கூட்டாளிகளுடன் 2 மோட்டார் சைக்கிள்களில் சென்று, தச்சநல்லூர் காவல் நிலையம் உள்பட 4 இடங்களில் பெட்ரோல் குண்டுகளை வீசினர்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, சரண் என்பவரை கைது செய்தனர். அதேபோல் தாழையூத்து போலீசார், அஜித்குமார், அவரது கூட்டாளி பெருமாள் ஆகியோரை நேற்று முன்தினம் கைது செய்தனர்.

இந்த வழக்கு தொடர்பாக அஜித்குமாரின் கூட்டாளிகளான ராஜவல்லிபுரத்தை சேர்ந்த கிருஷ்ணபெருமாள் (19), வல்லவன்கோட்டையை சேர்ந்த அருண் (22) ஆகியோரை போலீசார் தனிப்படை அமைத்து தேடி வந்தனர். அவர்கள் 2 பேரையும் தச்சநல்லூர் போலீசார் நேற்று கைது செய்தனர்.

கைதானவர்கள் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில், ‘‘போலீசாரை அச்சுறுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் காவல் நிலையம் உள்ளிட்ட இடங்களில் பெட்ரோல் குண்டுகளை வீசினோம்’’ என்று கூறி இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory