» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
இரட்டிப்பு லாபம்: ஆசை வார்த்தை கூறி கல்லுாரி முதல்வரிடம் ரூ.17 லட்சம் மோசடி!
சனி 18, அக்டோபர் 2025 9:34:54 PM (IST)
திருநெல்வேலியில் இரட்டிப்பு லாபம் கிடைக்கும் என்று ஆசை வார்த்தை கூறி கல்லுாரி முதல்வரிடம், ஆன்லைனில் 17.89 லட்சம் ரூபாய் மோசடி செய்தவர்கள் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
திருநெல்வேலி, பெருமாள்புரத்தை சேர்ந்தவர் ரஜப்பாத்திமா, 61; மேலப்பாளையம் அன்னை ஹாஜிரா பெண்கள் கல்லுாரி முதல்வர். கடந்த ஜூனில், 'டிஜிட்டல் மார்க்கெட்டிங் வேலை வாய்ப்பு' என்ற பெயரில், 'டெலிகிராம் வழியாக பணம் முதலீடு செய்தால் இரட்டிப்பு லாபம் கிடைக்கும்' என மர்மநபர்கள் தெரிவித்தனர்.
டிஜிட்டல்' கைது மோசடியில் ரூ.58 கோடி இழந்த தொழிலதிபர்
அதை நம்பி மூன்று வங்கி கணக்குகள் வைத்திருக்கும் ரஜப்பாத்திமா, முதலில், 15,000 ரூபாய் அனுப்பினார். அதற்கு லாபம் எனக்கூறி, 9,500 ரூபாயை அந்த நிறுவனம் அவரது வங்கி கணக்கிற்கு அனுப்பியது.
அதை நம்பி, வெவ்வேறு கணக்குகளில் அவர்கள் கூறிய, 'ஜிபே' எண்களில் ரஜப்பாத்திமா பணம் செலுத்தி வந்தார். அவரது தங்கை வங்கி கணக்கு மூலமும் அவர் பணம் செலுத்திஉள்ளார். பல தவணைகளாக, 17 லட்சத்து 89,000 ரூபாய் செலுத்தினார். ஆனால், மர்ம நபர்கள் அவருக்கு லாப பணம் தராமல் ஏமாற்றினர். இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கனமழையால் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து மூதாட்டி உயிரிழப்பு: நெல்லையில் பரிதாபம்!
சனி 18, அக்டோபர் 2025 5:25:48 PM (IST)

குற்றால அருவிகளில் 2 ஆவது நாளாக வெள்ளபெருக்கு : சுற்றுலாப் பயணிகளுக்கு தடை
வெள்ளி 17, அக்டோபர் 2025 11:00:44 AM (IST)

பாளையங்கோட்டை சிறையில் போக்சோ கைதி தற்கொலை விவகாரம்: டி.ஐ.ஜி. விசாரணை
வியாழன் 16, அக்டோபர் 2025 7:52:58 PM (IST)

கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்தில் பனை விதைகளை நடவு செய்யும் பணி துவக்கம்!
புதன் 15, அக்டோபர் 2025 4:52:08 PM (IST)

காவல் நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் மேலும் இருவர் கைது
புதன் 15, அக்டோபர் 2025 12:53:23 PM (IST)

பாளை. மத்திய சிறையில் கைதி தூக்குப்போட்டு தற்கொலை: போக்சோ வழக்கில் கைதானவர்
புதன் 15, அக்டோபர் 2025 8:46:52 AM (IST)
