» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
ஆலங்குளம் திமுக பேரூராட்சி தலைவி தகுதி நீக்கம்: சொத்துவரி தாமதமாக செலுத்தியதால் அதிரடி!
வியாழன் 23, அக்டோபர் 2025 8:38:04 AM (IST)
சொத்துவரி தாமதமாக செலுத்திய விவகாரத்தில் ஆலங்குளம் பேரூராட்சி தலைவியை தகுதி நீக்கம் செய்து செயல் அலுவலர் நடவடிக்கை மேற்கொண்டார்.
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் பேரூராட்சி 7-வது வார்டு கவுன்சிலராக போட்டியிட்டு வெற்றி பெற்ற சுதா மோகன்லால் பின்னர் பேரூராட்சி தலைவியாக தேர்வு செய்யப்பட்டார். தி.மு.க. பிரமுகரான இவர் தனக்கு சொந்தமான கட்டிடங்களுக்கு சொத்துவரியை தாமதமாக பேரூராட்சியில் செலுத்தியதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.இந்த நிலையில் ஐகோர்ட்டு உத்தரவின்பேரில், ஆலங்குளம் பேரூராட்சி தலைவி சுதா மோகன்லால் தகுதி நீக்கம் செய்யப்பட்டு உள்ளதாக பேரூராட்சி செயல் அலுவலர் (பொறுப்பு) வெங்கடகோபு அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ஆலங்குளம் பேரூராட்சி தலைவி சுதா மோகன்லால் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அமைந்துள்ள தனக்கு சொந்தமான வணிக மற்றும் குடியிருப்பு கட்டிடங்களுக்கு 2022-2023 ஆண்டுக்கான சொத்து வரியினை உரிய காலத்தில் செலுத்தாமல் காலம் தாழ்த்தி செலுத்தி இருக்கிறார். கட்டிடங்களுக்கான ரூ.6,500 சொத்து வரியினை உரிய காலத்தில் செலுத்த தவறியதால் அவரை தகுதி நீக்கம் செய்யக்கோரி ஆலங்குளம் பேரூராட்சி 9-வது வார்டு உறுப்பினர் சுபாஷ் சந்திரபோஸ் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடுத்தார்.
இந்த வழக்கு தொடர்பாக கடந்த வாரம் பேரூராட்சிகள் இயக்குனருக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆணை செயல்படுத்தப்பட்டது. நீதிமன்ற ஆணையின்படி, பேரூராட்சி தலைவி சுதா மோகன்லால் தனது கட்டிடங்களுக்கு சொத்து வரியை உரிய காலத்திற்குள் செலுத்தாமல் காலம் தாழ்த்தி செலுத்தியதால் ஆலங்குளம் பேரூராட்சி 7-வது வார்டு உறுப்பினர் மற்றும் ஆலங்குளம் பேரூராட்சி தலைவர் பதவிகளில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தென்காசி நீதிமன்றத்தில் ராக்கெட் ராஜா ஆஜர்: டிஎஸ்பி தலைமையில் போலீசார் குவிப்பு!
புதன் 17, டிசம்பர் 2025 5:32:20 PM (IST)

ஆட்சிமொழிச் சட்டவாரம் விழிப்புணர்வு பேரணி: மாவட்ட வருவாய் அலுவலர் தொடங்கி வைத்தார்
புதன் 17, டிசம்பர் 2025 4:46:23 PM (IST)

தென்காசி மாவட்டத்தில் பரவலாக மழை : சங்கரன் கோவிலில் பள்ளிகளுக்கு விடுமுறை!
புதன் 17, டிசம்பர் 2025 12:26:29 PM (IST)

ரவுடியின் மனைவி விஷம் குடித்து தற்கொலை : 2 மகள்களுக்கும் தீவிர சிகிச்சை!!
புதன் 17, டிசம்பர் 2025 11:54:59 AM (IST)

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் தேதி மாற்றம்: ஆட்சியர் இரா.சுகுமார் அறிவிப்பு
புதன் 17, டிசம்பர் 2025 11:09:51 AM (IST)

திருநெல்வேலி மாவட்டத்தில் ஈர்ப்பு வாகனம் 30ஆம் தேதி பொது ஏலம் - ஆட்சியர் தகவல்
செவ்வாய் 16, டிசம்பர் 2025 5:42:47 PM (IST)


