» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
தென்காசி மாவட்டத்திற்கு அக்.29,30 தேதிகளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பயணம்!
வியாழன் 23, அக்டோபர் 2025 3:28:48 PM (IST)
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வரும் 28ஆம் தேதி தூத்துக்குடி வந்து, சாலை மார்க்கமாக தென்காசி மாவட்டத்திற்கு செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
முதல்வர் மு.க.ஸ்டாலின் அக்டோபர் 24 மற்றும் 25ஆம் தேதிகளில் தென்காசி மாவட்டத்திற்கு பயணம் மேற்கொள்ள உள்ளதாக திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் மழையின் காரணமாக பயணம் தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில் வரும் 28ஆம் தேதி தூத்துக்குடிக்கு சென்றுவிட்டு பின்னர் அங்கிருந்து சாலை மார்க்கமாக தென்காசி மாவட்டத்திற்கு முதல்-அமைச்சர் செல்ல உள்ளார்.
29ஆம் தேதி தென்காசி மாவட்டத்தில் நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு அங்கிருந்து சாலை மார்க்கமாக மதுரை சென்று அன்றிரவு அங்கேயே தங்கும் முதல்-அமைச்சர், அக்டோபர் 30ஆம் தேதி பசும்பொன் தேவர் குருபூஜையை முன்னிட்டு காலை மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளார்.
தொடர்ந்து மதுரையில் இருந்து மீண்டும் சாலை மார்க்கமாக ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் சென்று அங்குள்ள தேவர் ஆலையத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்திவிட்டு பின்னர் சென்னை திரும்ப உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அரசு மேல்நிலைப் பள்ளிக்கு 30 மேஜை நாற்காலிகள்: ராபர்ட் புரூஸ் எம்பி வழங்கினார்!
சனி 31, ஜனவரி 2026 5:25:10 PM (IST)

நெல்லை மாநகராட்சியில் காலை உணவை குப்பையில் வீசிய தூய்மை பணியாளர்கள்
சனி 31, ஜனவரி 2026 8:36:34 AM (IST)

புனித வெள்ளியன்று மதுக்கடைகளை மூட தீர்மானம் : சட்டமன்றத்தில் நிறைவேற்ற கோரிக்கை!
வெள்ளி 30, ஜனவரி 2026 5:06:09 PM (IST)

காவல் நிலையத்தில் இளைஞர்கள் மீது பொய் வழக்கு : டிஎஸ்பி, இன்ஸ்பெக்டர் ஆஜர்!
வெள்ளி 30, ஜனவரி 2026 10:10:13 AM (IST)

உரிய நேரத்தில் சிறந்த கூட்டணியை அறிவிப்போம் : தென்காசியில் பிரேமலதா பேட்டி
வெள்ளி 30, ஜனவரி 2026 8:28:10 AM (IST)

நெல்லை தொகுதியில் பாஜக சார்பில் மீண்டும் போட்டி: நயினார் நாகேந்திரன் பேட்டி!
வியாழன் 29, ஜனவரி 2026 4:43:56 PM (IST)

