» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
நெல்லையில் பெண் பயணியை அவதூறாக பேசிய அரசு பஸ் டிரைவர் பணி இடைநீக்கம்
சனி 25, அக்டோபர் 2025 8:36:18 AM (IST)

நெல்லையில் பெண் பயணியை அவதூறாக பேசிய அரசு பஸ் டிரைவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில் தமிழகம் முழுவதும் பெண்கள் இலவச பயணம் மேற்கொள்வதற்காக மகளிர் விடியல் பயணம் என்ற திட்டத்தின் பெயரில் அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் ஏராளமான பெண்கள் பயனடைந்து வருகின்றனர். ஆனால். இந்த பஸ்சில் இலவசமாக பயணம் செய்யும் பெண் பயணிகளிடம், சில டிரைவர்கள் அல்லது கண்டக்டர்கள் ‘ஓசி’ பயணம் செய்வதாக அவதூறாக பேசி சர்ச்சையில் சிக்கி வருகிறார்கள்.
அவர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதுபோன்ற சம்பவம் நெல்லையிலும் அரங்கேறி உள்ளது. நேற்று முன்தினம் இரவு நெல்லை ஐகிரவுண்டு பகுதியில் இருந்து நெல்லை சந்திப்பு நோக்கி மகளிர் விடியல் பயண பஸ் புறப்பட்டு சென்று கொண்டிருந்தது.
இதில் ஏறிய பெண் ஒருவர், கொக்கிரகுளம் பகுதியில் இறங்க வேண்டும் என்று கூறி டிக்கெட் எடுத்தார். ஆனால் டிரைவர், உரிய பஸ் நிறுத்தம் வந்தபிறகும் அதனருகே பெண்ணை இறக்காமல் சற்று தள்ளி இறக்கிவிட்டார். இதுகுறித்து அந்த பெண் தட்டிகேட்டபோது, அவரை பஸ் டிரைவர் ஓசி பயணம் செய்வதாக கூறி அவதூறாக பேசி திட்டி உள்ளார்.
இதனால் மனமுடைந்த பெண் பயணி அங்கிருந்து புறப்பட்டு சென்று தனது உறவினர்களிடம் நடந்தவற்றை கூறினார். பின்னர் அவர்கள் அனைவரும் உடனடியாக சந்திப்பு ரெயில் நிலையம் வந்தனர். அதற்குள் அந்த பஸ் அங்கு வந்துவிட்டது. பஸ் புறப்பட தயாரானபோது, பெண் பயணியும், உறவினர்களும் சேர்ந்து பஸ்சை மறித்து டிரைவரிடம் வாக்குவாதம் செய்தனர்.
இதுதொடர்பான வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாக பரவியது. அதன்பேரில், நெல்லை மண்டல போக்குவரத்து துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘இந்த சம்பவம் குறித்து எங்களுக்கு புகார் வந்துள்ளது. சம்பந்தப்பட்ட டிரைவர் முருகேசன் மீது துறைரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு பணி இடைநீக்கம் செய்யப்பட்டு உள்ளார்’’ என தெரிவித்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பெற்ற மகளை கர்ப்பமாக்கிய தந்தைக்கு தூக்கு தண்டனை : போக்சோ நீதிமன்றம்அதிரடி தீர்ப்பு
வியாழன் 25, டிசம்பர் 2025 8:52:42 AM (IST)

தென்காசியில் மட்டும் அக்னிபாத் திட்டத்தின் மூலம் 300 வீரர்கள் ராணுவத்திற்கு தேர்வு..!!
புதன் 24, டிசம்பர் 2025 11:59:50 AM (IST)

பொருநை அருங்காட்சியகத்தினை பார்வையிட பொதுமக்கள் ஆர்வம்!
செவ்வாய் 23, டிசம்பர் 2025 5:10:11 PM (IST)

கால்நடைகளுக்கான தடுப்பூசி பணி டிசம்பர் 29-ஆம் தேதி தொடக்கம் - ஆட்சியர் தகவல்
செவ்வாய் 23, டிசம்பர் 2025 3:57:52 PM (IST)

பொருநை அருங்காட்சியகத்திற்கு பேருந்துகள் இயக்கம் - ஆட்சியர் சுகுமார் தகவல்
செவ்வாய் 23, டிசம்பர் 2025 10:38:30 AM (IST)

பொருநை அருங்காட்சியகத்தை பார்வையிட நாளை முதல் அனுமதி: கட்டணம் நிர்ணயம்!
திங்கள் 22, டிசம்பர் 2025 8:01:26 PM (IST)

