» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் ஜாமீனில் வந்து தலைமறைவானவர் கைது!

செவ்வாய் 25, நவம்பர் 2025 3:43:37 PM (IST)

நெல்லையில் தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் ஜாமீனில் வந்து தலைமறைவான நபரை போலீசார் கைது செய்தனர். 

திருநெல்வேலி மாவட்டம், தாழையூத்து பகுதியில் கடந்த 2021-ம் ஆண்டு தற்கொலைக்கு தூண்டுதல் குற்றத்தில் ஈடுபட்ட கன்னியாகுமரி மாவட்டம், வெட்டூரணி மடத்தை சேர்ந்த பாலாஜி (34) என்பவர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்தார்.

பாலாஜி நீதிமன்ற விசாரணைக்கு 1½ மாதமாக ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்ததால், அவருக்கு திருநெல்வேலி குற்றவியல் நீதிமன்றத்தில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து அவரை தாழையூத்து காவல்துறையினர் தேடிவந்த நிலையில், நேற்று கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Tirunelveli Business Directory