» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

விவசாய மின் இணைப்பிற்கு ரூ.7 ஆயிரம் லஞ்சம்: மின்வாரிய பொறியாளர் கைது!

செவ்வாய் 25, நவம்பர் 2025 5:55:30 PM (IST)

தென்காசி அருகே விவசாய மின் இணைப்பிற்கு மீட்டர் பொருத்த ரூ.7 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய இளநிலை பொறியாளரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். 

தென்காசி மாவட்டம், வீ.கே.புதூர், காமாட்சி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் செல்வகணேஷ் (30). இவர் தனது அப்பாவின் பெயரில் வீ.கே.புதூரில் உள்ள நிலத்திற்கு விவசாய மின் இணைப்பிற்கு மீட்டர் பொருத்த மின்வாரிய இளநிலை பொறியாளர் பிரேம் ஆனந்தை சந்தித்து கேட்டுள்ளார். அப்போது ரூ.7 ஆயிரம் லஞ்சம் கொடுத்தால் தான் மீட்டர் பொருத்துவேன் என்று கறாராக பிரேம் ஆனந்த் கூறியுள்ளார்.

லஞ்சம் கொடுக்க விரும்பாத செல்வகணேஷ் தென்காசி லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் கொடுத்தார். அப்போது லஞ்சம் ஒழிப்புத்துறை போலீசார் ரசாயனப் பவுடர் தடவப்பட்ட ரூ.7 ஆயிரம் பணத்தை வழங்க அறிவுறுத்தி உள்ளனர். பின்னர், பிரேம் ஆனந்தை சந்தித்து ரூ.7 ஆயிரம் பணம் கொடுக்க செல்வகணேஷ் கொடுத்துள்ளார்.

அதற்கு வீ.கே.புரத்தை சேர்ந்த தனது நண்பர் துரையிடம் கொடுக்குமாறு பிரேம் ஆனந்த் கூறியுள்ளார்.அந்த லஞ்சப்பணத்தை துரை பெற்றுக்கொண்டபோது அங்கு மறைந்திருந்த தென்காசி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு அதிகாரிகளால் பிரேம் ஆனந்த் மற்றும் துரை ஆகிய 2பேர் கைது செய்யப்பட்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Tirunelveli Business Directory