» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
எஸ்ஐஆர் படிவங்களை வழங்கி ஒப்புதல் சீட்டு பெற வேண்டும்: ஆட்சியர் வேண்டுகோள்
புதன் 26, நவம்பர் 2025 4:33:50 PM (IST)
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி கணக்கீட்டு படிவங்கள் பெற்றுள்ள வாக்காளர்கள் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் வழங்கி அதற்கான ஒப்புதல் பெறுமாறு மாவட்ட தேர்தல் அலுவலர்/ திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, திருநெல்வேலி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 4.11.2025 முதல் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மூலம் வாக்காளர்களுக்கு வீடு வீடாகச் சென்று கணக்கீட்டுப் படிவங்களை வழங்கி அதை எவ்வாறு பூர்த்தி செய்ய வேண்டும் என்பது குறித்து தெளிவாக விளக்கமளிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து பூர்த்தி செய்யப்பட்ட கணக்கீட்டுப் படிவங்களை வாக்காளர்களிடமிருந்து திரும்ப பெற்று இந்தியத் தேர்தல் ஆணையத்தின் பிரத்யேக செயலியில் பதிவேற்றம் செய்யும் பணிகளில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களும் அவர்களுக்கு உதவியாக தன்னார்வலர்களும் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கணக்கீட்டுப் படிவங்களை பூர்த்தி செய்ய தெரியாத வாக்காளர்கள் அல்லது கணக்கீட்டு படிவங்களை பூர்த்தி செய்வதில் இடர்பாடுகளை எதிர்கொள்ளும் வாக்களர்களுக்கு உதவிட தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் வாக்காளர் உதவி மையங்கள் அமைக்கப்பட்டு பணிகள் நடைபெற்றது.திருநெல்வேலி மாவட்டத்தில் 13,71,547 (96.70%) கணக்கீட்டு படிவங்கள் வழங்கப்பட்டு, BIO App பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
4.12.2025 அன்று பதிவேற்றம் செய்வதற்கு கடைசி நாளாகும் கணக்கீட்டு படிவங்கள் வழங்க வாக்காளர்கள் கடைசி ஓரிரு நாட்களை பயன்படுத்தும் போது பதிவேற்றம் செய்வதிலும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கும், தன்னார்வலர்களுக்கும் மிக சிரமமான பணியாக இருக்கும். கணக்கீட்டுபடிவங்கள் பெற்றுள்ள வாக்காளர்கள் இன்னும் ஓரிரு நாட்களில் கணக்கீட்டு படிவங்களை முறையாக பூர்த்தி செய்து தங்களின் வாக்குச்சாவடி நிலை அலுவலரிடம் (BLO)வழங்கி அதற்கான ஒப்புதலை பெற்றுக் கொள்ளுமாறும் கடைசி நேர நெருக்கடிகளை தவிர்க்குமாறும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார் கேட்டுக் கொண்டுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வீடுகளில் புகுந்து 20 பவுன் நகை-வெள்ளிப்பொருட்கள் கொள்ளை: மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு!
ஞாயிறு 11, ஜனவரி 2026 10:36:46 AM (IST)

போகி பண்டிகையில் பிளாஸ்டிக், டயர், ட்யூப் எரிக்க கூடாது: ஆட்சியர் சுகுமார் வேண்டுகோள்
சனி 10, ஜனவரி 2026 5:20:20 PM (IST)

தனியார் வேலைவாய்ப்பு முகாமில் 635 பேருக்கு நியமன ஆணை: சபாநாயகர் அப்பாவு வழங்கினார்
சனி 10, ஜனவரி 2026 4:31:25 PM (IST)

தொழிலதிபரிடம் ரூ.70 லட்சம் மோசடி வழக்கில் ஹரி நாடார் கைது
சனி 10, ஜனவரி 2026 12:52:16 PM (IST)

ஜன.10, 11ல் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த முகாம் - ஆட்சியர் தகவல்!
வெள்ளி 9, ஜனவரி 2026 4:39:06 PM (IST)

திருநெல்வேலியில் ஜன.21ஆம் தேதி பிரதம மந்திரி தேசிய தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம்
வெள்ளி 9, ஜனவரி 2026 12:03:38 PM (IST)

