» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

வீடு புகுந்து மூதாட்டியிடம் 5 பவுன் நகை பறிப்பு : மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

வியாழன் 27, நவம்பர் 2025 11:56:38 AM (IST)

கூடங்குளம் அருகே வீடுபுகுந்து மூதாட்டியிடம் 5 பவுன் நகை பறித்த மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

நெல்லை மாவட்டம், கூடங்குளம் அருகே ஆவுடையாள்புரத்தை சேர்ந்தவர் முத்துப்பாண்டி. இவரது மனைவி மூக்கம்மாள் (70). இந்த தம்பதிக்கு 3 ஆண் மற்றும் 2 பெண்கள் உள்ளனர். அவர்கள் அனைவருக்கும் திருமணமாகி அவரவர் குடும்பத்தினருடன் வசித்து வருகின்றனர். இதனால் முத்துப்பாண்டியும், மூக்கம்மாளும் வீட்டில் தங்கியுள்ளனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் இருவரும் காற்றுக்காக கதவை பூட்டாமல் லேசாக அடைத்துவிட்டு வீட்டுக்குள் தூங்கிக்கொண்டிருந்தனர். அப்போது அதிகாலை 2 மணியளவில் மர்ம நபர்கள் சிலர் மூக்கம்மாளின் வீட்டுக்கு வந்தனர். அவர்கள் அந்த வீட்டின் மின் இணைப்பை துண்டித்துவிட்டு வீட்டுக்குள் சென்றனர்.

அப்போது அங்கு தூங்கிக்கொண்டிருந்த மூக்கம்மாள் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் நகையை பறித்தனர். இதனால் திடுக்கிட்டு எழுந்த மூக்கம்மாள் கூச்சலிட்டார். ஆனால் அதற்குள் மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர். இதுகுறித்து தகவலறிந்ததும் கூடங்குளம் சப்-இன்ஸ்பெக்டர்கள் நெஜில்சன் மற்றும் கிருபா ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.



மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory