» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
மஞ்சப்பை விருதிற்கு விண்ணப்பிக்கலாம்; முதல் பரிசு ரூ. 10 லட்சம் - ஆட்சியர் தகவல்!
செவ்வாய் 2, டிசம்பர் 2025 12:35:27 PM (IST)
திருநெல்வேலி மாவட்டத்தில் 2025 – 2026 ஆம் ஆண்டிற்கான மஞ்சப்பை விருதிற்கு விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து ஆட்சியர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் "மீண்டும் மஞ்சப்பை" பிரச்சாரத்தை முன்னெடுத்துச் செல்லும் வகையில், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர், 2022-23 நிதியாண்டிற்கான "மஞ்சப்பை விருது” களை சட்டமன்றக் கூட்டத்தில் அறிவித்தார். ஒற்றைப் பயன்பாட்டு பிளாஸ்டிக்குகள் மீதான தடையை திறம்பட செயல்படுத்தி, ஒற்றைப் பயன்பாட்டு பிளாஸ்டிக் (SUP) கைப்பைகள் மற்றும் பிற தடைசெய்யப்பட்ட ஒற்றைப் பயன்பாட்டு பிளாஸ்டிக்குகளுக்கு மாற்றுகளைப் பயன்படுத்துவதை ஊக்குவித்து, மஞ்சப்பை போன்ற பாரம்பரிய சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்றுகளின் பயன்பாட்டை மீண்டும் உயிர்ப்பித்து, தங்கள் வளாகத்தை பிளாஸ்டிக் இல்லாததாக மாற்றும் சிறந்த 3 பள்ளிகள், 3 கல்லூரிகள் மற்றும் 3 வணிக நிறுவனங்களுக்கு மாநில அளவில் இது வழங்கப்படும். முதல் பரிசாக ரூ. 10 லட்சம், இரண்டாம் பரிசாக ரூ. 5 லட்சம் மற்றும் மூன்றாம் பரிசாக ரூ. 3 லட்சம் பரிசு வழங்கப்படும்.
இந்த அறிவிப்பின்படி, தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் (TNPCB), ஒற்றைப் பயன்பாட்டு பிளாஸ்டிக்குகளுக்கு மாற்றாகப் சுற்றுச்சுழலுக்கு உகந்த மாற்றுப் பொருட்கள் பயன்படுத்துவதை ஊக்குவிப்பதற்கும், தங்கள் வளாகங்களுக்கு உள்ளேயும் வெளியேயும் ஆக்கப்பூர்வமான முயற்சிகள் மூலம் தடையை அமல்படுத்துவதற்கும், வளாகத்தை பிளாஸ்டிக் இல்லாததாக மாற்றுவதற்கும் முன்மாதிரியான பங்களிப்பைச் செய்த பள்ளிகள்/கல்லூரிகள்/வணிக நிறுவனங்களுக்கு மஞ்சப்பை விருதுகளை வழங்க முன்மொழிகிறது.
விண்ணப்பப் படிவங்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலக இணையதளத்திலும், (www.tirunelveli.nic.in) தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் இணையதளத்திலும் (tnpcb.gov.in) தரவிறக்கம் செய்து கொள்ளலாம் விண்ணப்பங்களின் அனைத்து இணைப்புகளிலும் தனிநபர்/ அமைப்புத் தலைவர் முறையாக கையொப்பமிட வேண்டும். விண்ணப்பங்களின் மென் நகலுடன், இரண்டு அச்சுப் பிரதிகள் (கடின நகல்) திருநெல்வேலி மாவட்ட தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தில் 15.01.2026க்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார் அறிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வாக்காளர்களுக்கு தலா ரூ.1,000 வழங்கப்பட வேண்டும் : அதிமுக வேட்பாளரின் பேச்சால் சர்ச்சை!
திங்கள் 20, ஏப்ரல் 2026 5:51:43 PM (IST)

திருநெல்வேலியில் தேர்தல் விழிப்புணர்வு சதுரங்கப் போட்டி: ஆட்சியர் தொடங்கி வைத்தார்
திங்கள் 20, ஏப்ரல் 2026 5:08:41 PM (IST)

மகளிருக்கு 33% இடஒதுக்கீடு விரைவில் அமலாகும்: மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் உறுதி!
திங்கள் 20, ஏப்ரல் 2026 9:12:04 AM (IST)

தொழில் அதிபர் வீட்டில் ரூ.2 கோடி நகை - பணம் பறிமுதல் : தேர்தல் நெருங்கும் வேளையில் பரபரப்பு
ஞாயிறு 19, ஏப்ரல் 2026 9:50:44 AM (IST)

மாற்றுத்திறனாளிகள் சிரமமின்றி வாக்களிக்க சக்சம் செயலி: ஆட்சியர் தகவல்!
சனி 18, ஏப்ரல் 2026 5:10:16 PM (IST)

திருநெல்வேலியில் தேர்தல் விழிப்புணர்வு: ராட்சத பலூனை பறக்கவிட்டார் மாவட்ட ஆட்சியர்!
சனி 18, ஏப்ரல் 2026 4:02:30 PM (IST)

