» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
திருநெல்வேலியில் தேர்தல் விழிப்புணர்வு சதுரங்கப் போட்டி: ஆட்சியர் தொடங்கி வைத்தார்
திங்கள் 20, ஏப்ரல் 2026 5:08:41 PM (IST)

சட்டமன்றப் பொதுத்தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி, திருநெல்வேலியில் மாணவர்களுக்கான தேர்தல் விழிப்புணர்வு சதுரங்கப் போட்டியை மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான இரா.சுகுமார் தொடங்கி வைத்தார்.
இந்தியத் தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி, திருநெல்வேலி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. முதல்முறை வாக்காளர்கள், மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் தங்களது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றுவதன் அவசியத்தை வலியுறுத்துவதே இதன் நோக்கமாகும்.
பாளையங்கோட்டை வேல்ஸ் வித்தியாலயா சிபிஎஸ்இ (CBSE) பள்ளியில் நடைபெற்ற இப்போட்டியில் ஏராளமான மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில் பள்ளியில் பயிலும் மாணவர்களின் பெற்றோர்கள் சுமார் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அவர்களிடம் சட்டமன்றத் தேர்தலில் வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்து மாவட்ட ஆட்சியர் உரையாற்றினார். தொடர்ந்து, தேர்தல் தொடர்பான விழிப்புணர்வு உறுதிமொழியினை அனைவரும் எடுத்துக் கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சரவணன், வருவாய் நீதிமன்றத் துணை ஆட்சியர் லதா, பள்ளி தாளாளர் செந்தில் பிரகாஷ், இயக்குனர் திலகவதி, முதல்வர் முருகேஷ், மேலாளர் செல்வராஜ் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தாம்பரம் - தென்காசி இடையே பகல் நேர சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு!
வெள்ளி 24, ஜூலை 2026 10:25:18 AM (IST)

பழைய குற்றாலத்தில் சட்டவிரோத வாகனக் கட்டண வசூல் : ஆட்சியருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!
வெள்ளி 24, ஜூலை 2026 8:44:06 AM (IST)

வரதட்சணை கொடுமையால் இளம் பெண் தற்கொலை: கல்லூரிப் பேராசிரியர் மற்றும் அவரது தாய் கைது!
வெள்ளி 24, ஜூலை 2026 7:50:01 AM (IST)

நலவாழ்வுச் சங்கத்தில் பல்வேறு பணியிடங்கள்: விண்ணப்பிக்க ஆட்சியர் ஆனந்த் மோகன் அழைப்பு!
வியாழன் 23, ஜூலை 2026 5:43:08 PM (IST)

முன்னோடி திட்டங்களுக்கு மாவட்ட நிர்வாகம் முழு ஒத்துழைப்பை வழங்கும்: ஆட்சியர் உறுதி!
புதன் 22, ஜூலை 2026 5:11:44 PM (IST)

நெல்லை இரட்டைக் கொலை வழக்கில் தொடர்புடைய அனைவரும் கைது: காவல்துறை அறிவிப்பு!
செவ்வாய் 21, ஜூலை 2026 4:40:17 PM (IST)


