» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
தென்காசியில் அரசு வழக்கறிஞர் வெட்டிக் கொலை : மர்ம நபர்கள் வெறிச்செயல்
புதன் 3, டிசம்பர் 2025 4:34:24 PM (IST)
தென்காசியில் அரசு வழக்கறிஞர் அவரது அலுவலகம் அருகிலேயே மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் அரசு வழக்கறிஞராக பணிபுரிந்து வந்தவர் முத்துக்குமாரசாமி. இவர் தென்காசி கூலக்கடை பஜார் பகுதியில் அலுவலகம் நடத்தி வருகிறார். இன்று மதியம் அவரது அலுவலகத்திற்கு அருகில் அவர் நின்றுகொண்டிருந்தபோது மர்ம நபர்கள் சிலர் அவரை சரமாரியாக அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிச் சென்றுவிட்டனர்.
இதில் பலத்த காயம் அடைந்த அவரை போலீசார் மீட்டு தென்காசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று உள்ளனர். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். இந்த கொலை தொடர்பாக போலீசார வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். அரசு வழக்கறிஞர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் தென்காசி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

குடும்பத் தகராறில் கோவில் பூசாரி வெட்டிக்கொலை : அண்ணன் மகன் கைது - நெல்லையில் பயங்கரம்
திங்கள் 27, ஏப்ரல் 2026 9:04:24 AM (IST)

நெல்லை மருத்துவரிடம் ஆசை வார்த்தை கூறி ரூ.14¾ லட்சம் மோசடி – கேரள வாலிபர் கைது!!
ஞாயிறு 26, ஏப்ரல் 2026 9:27:12 AM (IST)

தச்சநல்லூரில் சித்திரை தேரோட்டம் கோலாகலம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!
வெள்ளி 24, ஏப்ரல் 2026 8:30:07 PM (IST)

நெல்லை மாவட்டத்தில் 77.37% வாக்குப்பதிவு: வாக்கு எண்ணும் மையத்தில் பலத்த பாதுகாப்பு!
வெள்ளி 24, ஏப்ரல் 2026 5:12:45 PM (IST)

சென்னை - நெல்லை இடையே சிறப்பு மெமு ரயில் இயக்கம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு
வெள்ளி 24, ஏப்ரல் 2026 4:36:55 PM (IST)

இரட்டைக்கொலை விவகாரத்தில் புறக்கணிப்பு : வாக்களித்த இளம்பெண்ணால் பரபரப்பு!
வியாழன் 23, ஏப்ரல் 2026 4:34:18 PM (IST)


