» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
தலைமைக் காவலரை கொல்ல முயற்சி: 5பேர் கும்பலுக்கு போலீஸ் வலைவீசு்சு!
வியாழன் 4, டிசம்பர் 2025 11:34:18 AM (IST)
ஆலங்குளம் அருகே தலைமைக் காவலரை துரத்திச் சென்று கொல்ல முயன்ற 5பேர் கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள நெட்டூர் ஊராட்சி அலுவலகத்தில் செயல்பட்டு வரும் புறக்காவல் நிலையத்தில் தலைமைக் காவலர் முருகன் (38) ஒரு பெண் காவலர் உள்பட இரு காவலர்கள் நேற்றுஇரவு நேர பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்கு கம்பு உள்ளிட்ட ஆயுதங்களுடன் வந்த 5-க்கும் மேற்பட்ட நபர்கள் காவலர்களை தாக்க முற்பட்டனர்.
அதில் ஒருவர் தலைமைக் காவலர் முருகனை துரத்திச் சென்று அரிவாளால் வெட்ட முயன்றுள்ளார். இதில் தலைமைக் காவலர் சுதாரித்துக் கொண்டு தப்பினார். எனினும் அவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. தொடர்ந்து அந்த கும்பல் தப்பி ஓடியது. இதுகுறித்து தகவல் அறிந்து வந்த தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன், ஆலங்குளம் மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் கிளட்ஸன் ஜோஸ் மற்றும் காவலர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், ஆலங்குளம் அருகே உள்ள நெட்டூர் கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவரை அம்பாசமுத்திரத்தைச் சேர்ந்த முத்துப்பாண்டி(30) என்பவர் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துள்ளார். தம்பதிக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கணவனை விட்டு மனைவி பிரிந்து நெட்டூரில் வசித்து வருகிறார். முத்துப்பாண்டி அடிக்கடி நெட்டூர் வந்து மனைவியிடம் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து ஆலங்குளம் காவல் நிலையத்தில் அந்தப் பெண் அளித்த புகாரின் பேரில் காவலர்கள் இரு நாள்களாக விசாரணை மேற்கொண்டு வந்தனர். மனைவிக்கு ஆதரவாக போலீசார் செயல்படுவதாக கருதிய முத்துப்பாண்டி ஆத்திரமடைந்து தனது உறவினர்களுடன் காவலர்களை தாக்க முற்பட்டது தெரியவந்தது. இதையடுத்து முத்துப்பாண்டி உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிந்த ஆலங்குளம் காவலர்கள் அவர்களைத் தீவிரமாக தேடி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லை மாவட்டத்தில் எஸ்ஐஆர் பணிகள் : தேர்தல் ஆணையத்தின் இயக்குநர் ஆய்வு!
வியாழன் 4, டிசம்பர் 2025 5:02:54 PM (IST)

கலவரத்தை தூண்டும் நோக்கத்தில் தி.மு.க. அரசு செயல்படுகிறது: நயினார் நாகேந்திரன் பேட்டி
வியாழன் 4, டிசம்பர் 2025 3:44:35 PM (IST)

நெல்லை, தூத்துக்குடி, தென்காசியில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆர்வலர் தகவல்!
வியாழன் 4, டிசம்பர் 2025 3:31:53 PM (IST)

கவின் ஆணவப்படுகொலை வழக்கு: கைதான சப்-இன்ஸ்பெக்டரின் ஜாமீன் மனு தள்ளுபடி!
வியாழன் 4, டிசம்பர் 2025 12:04:01 PM (IST)

தென்காசியில் அரசு வழக்கறிஞர் வெட்டிக் கொலை : மர்ம நபர்கள் வெறிச்செயல்
புதன் 3, டிசம்பர் 2025 4:34:24 PM (IST)

ஓட்டல் உரிமையாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு: நெல்லை அருகே பரபரப்பு!!
புதன் 3, டிசம்பர் 2025 8:24:25 AM (IST)


