» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
பெண் மீன் வியாபாரியை தாக்கி, கடை சூறை : பெண்கள் உட்பட 5பேர் மீது வழக்குப் பதிவு!
புதன் 31, டிசம்பர் 2025 10:29:33 AM (IST)

தூத்துக்குடியில் பெண் மீன் வியாபாரியை தாக்கி, அவரது கடையை சேதப்படுத்திய பெண்கள் உட்பட 5பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
தூத்துக்குடி சக்தி நகரை சேர்ந்தவர் பால்ராஜ் மனைவி பார்வதி (63). இவர் தூத்துக்குடி பெருமாள் புரம் மெயின் ரோட்டில் மீன் கடை நடத்தி வருகிறார். இந்த கடையை அகற்ற வலியுறுத்தி அருகில் உள்ள வீட்டைச் சேர்ந்த பெண்கள் இவரிடம் சண்டை போட்டுள்ளனர். அப்போது வாக்குவாதம் முற்றவே அந்த பகுதியை அந்த பெண்களின் உறவினர்கள் சிலர் சேர்ந்து மீன் கடையை அடித்து நொறுக்கி சேதப்படுத்தி உள்ளனர்.
மேலும் மீன் கடை நடத்தி வரும் பார்வதியையும் கொடூரமாக தாக்கினார்களாம். இதில், படுகாயம் அடைந்த பார்வதி தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து அவர் அளித்த புகாரின் பேரில் அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் உட்பட 5பேர் மீது தென்பாகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
மக்கள் கருத்து
தமிழ்ச்செல்வன்Dec 31, 2025 - 03:01:38 PM | Posted IP 172.7*****
தூத்துக்குடியில் பொம்பளைகள் எல்லாம் ரவுடித்தனத்துல இறங்கிட்டாளுகளா?
மேலும் தொடரும் செய்திகள்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை: குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு!
வெள்ளி 2, ஜனவரி 2026 10:13:41 AM (IST)

பொருநை அருங்காட்சியகம்: நிதிஅமைச்சருக்கு சென்னை வாழ் நெல்லை மக்கள் பாராட்டு
வெள்ளி 2, ஜனவரி 2026 8:30:06 AM (IST)

தென் மாவட்டங்களில் சாதிய மோதல்களை முற்றிலுமாக ஒழிக்கத் திட்டம்: டிஐஜி சரவணன் உறுதி!
வெள்ளி 2, ஜனவரி 2026 8:24:46 AM (IST)

நெல்லை, குமரி மாவட்டங்களில் மினி டைடல் பூங்கா : தமிழ்நாடு அரசு டெண்டர் கோரியது!
வியாழன் 1, ஜனவரி 2026 12:35:05 PM (IST)

அரசுப் பேருந்துகளுக்கு பாஸ்டேக்கில் தேவையான இருப்பு உள்ளது : பொதுமேலாளர் தகவல்
புதன் 31, டிசம்பர் 2025 4:06:18 PM (IST)

நெல்லை சரக புதிய டிஐஜியாக சரவணன் நியமனம்!
புதன் 31, டிசம்பர் 2025 12:19:33 PM (IST)



PRABHAKARANDec 31, 2025 - 03:22:57 PM | Posted IP 162.1*****