» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை: குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு!
வெள்ளி 2, ஜனவரி 2026 10:13:41 AM (IST)
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. சுற்றுலாப் பயணிகள் குளிக்க தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நேற்று முன்தினம் இரவு ஆங்காங்கே பரவலாக மழை பெய்தது. ஆங்கில புத்தாண்டு பிறப்பு மழையுடன் தொடங்கியது. சென்னையில் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் நேற்று காலையும் தொடர்ந்து மழை பெய்தது. லட்சதீவு-குமரிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும் இலங்கை கடலோர பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதனால் இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, புலியருவி, சிற்றருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. சுற்றுலாப் பயணிகள் நலன் கருதி அருவிகளில் குளிக்க தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லையில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை : கள்ளக்காதலனுடன் தாய் கைது!
ஞாயிறு 24, மே 2026 8:46:25 PM (IST)

காவல் நிலையத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்: 3 போலீசார் ஆயுதப்படைக்கு மாற்றம்!
சனி 23, மே 2026 8:56:35 AM (IST)

தேசிய டிஜிட்டல் கால்நடை இயக்கம்: கால்நடைகளின் விபரங்களைப் புதுப்பிக்க ஆட்சியர் அறிவுறுத்தல்!
வெள்ளி 22, மே 2026 5:47:46 PM (IST)

கொக்கிரகுளத்தில் புதிய ஆதார் சேவை மையம் : ஆட்சியர் இரா.சுகுமார் திறந்து வைத்தார்
வியாழன் 21, மே 2026 4:38:35 PM (IST)

நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீண்..? மண்டல மேலாளர் மறுப்பு; 2 பேர் பணிநீக்கம்!
வியாழன் 21, மே 2026 11:20:26 AM (IST)

விவிபேட் இயந்திரங்களின் பேப்பர் ரோல்களை அகற்றும் பணி: ஆட்சியர் இரா.சுகுமார் நேரில் ஆய்வு!
செவ்வாய் 19, மே 2026 5:50:43 PM (IST)


