» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தூத்துக்குடியில் வடமாநில வாலிபரை தாக்கி செல்போன் பறிப்பு : 2 பேர் கைது!

புதன் 31, டிசம்பர் 2025 10:55:51 AM (IST)

தூத்துக்குடியில் வடமாநில வாலிபரை தாக்கி செல்போன் பறித்த 2பேரை போலீசார் கைது செய்தனர்.

ராஜஸ்தானைச் சேர்ந்தவர்கள்  மசியன் மகன்  ராஜேந்திரன் (33), ராம் கோபிசந்த் மகன் ஹேமந்த் (20) ஆகிய இருவரும் தூத்துக்குடி முத்தம்மாள் காலனி 1வது தெருவில் தங்கியிருந்து கொத்தனார் வேலை செய்து வருகின்றனர். 

நேற்று வேலை முடிந்து இரவு 7 மணி அளவில் அதே தெருவில் நடந்து வந்து கொண்டிருந்த பொழுது பைக்கில் வந்த 2பேர் அவர்களை வழிமறித்துள்ளனர். அதில் ஒருவரை கல்லால் தாக்கி  அவரது செல்போனை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றுவிட்டனர். இதில் காயம் அடைந்த ராஜேந்திரன் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். 

இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில் சிப்காட் இன்ஸ்பெக்டர் தனசேகரன் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தூத்துக்குடி வடக்கு சங்கரபேரியைச் சேர்ந்த  கோட்டை கருப்பசாமி மகன் தண்டேஸ்வரன் (26),  தேவர் காலனி 4வது தெருவைச் சேர்ந்த  செல்லத்துரை மகன் மாணிக்கராஜா (24) ஆகிய 2பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


மக்கள் கருத்து

MUTHUSELVAMDec 31, 2025 - 01:47:32 PM | Posted IP 172.7*****

மாணிக்கராஜா தேவர் காலனி கிடையாது. தவறான தகவல் போடதிங்க

ராஜாDec 31, 2025 - 01:04:21 PM | Posted IP 162.1*****

தேவர் காலனி யாருக்கும் கிடையாது சும்மா போடாதீங்க ஆதார் கார்டு பார்த்து போடுங்க

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Tirunelveli Business Directory