» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தூத்துக்குடியில் பழுதான மின்கம்பங்களை மாற்ற நடவடிக்கை : மேயர் ஜெகன் பெரியசாமி தகவல்!

புதன் 31, டிசம்பர் 2025 3:09:33 PM (IST)



தூத்துக்குடி மாநகராட்சியில் பழுதான மின்கம்பங்கள் குறித்து தகவல் தெரிவித்தால் மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்தார். 

தூத்துக்குடி மாநகராட்சி சாதாரண கூட்டம் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில், மாநகராட்சி ஆணையர் பிரியங்கா, துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ் ஆகியோர் முன்னிலையில்  நடந்தது. கூட்டத்தை தொடங்கி வைத்து மேயர் பேசியதாவது : தூத்துக்குடி மாநகராட்சியில் கடந்த நான்கு ஆண்டுகளாக வளர்ச்சிப் பணிகளுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்த கவுன்சிலர் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். 

கடந்த நான்கு ஆண்டுகளில் 3000 சாலைகள் புதிதாக போடப்பட்டுள்ளது. பாதாள சாக்கடை திட்டம் 90 சதவீதம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் கால்நடைகள் ரோடுகளில் பொதுமக்களுக்கு இடையூறாக திரிகிறது. இதனால் மாடுகளைப் பிடித்து அபராதம் விதிக்கப்பட்டு வந்தது. ஆனால் மாட்டின் உரிமையாளர்கள் தெருக்களில் மீண்டும் மாடுகளை விடுகிறார்கள் இதனால் மாடுகளை பிடித்து கோசாலையில் அடைக்க திட்டமிட்டு உள்ளோம். மாடுகளை மீண்டும் உரிமையாளர்களுக்கு கொடுக்க மாட்டோம்.

தூத்துக்குடியில் 1882 மின்கம்பங்கள் புதிதாக அமைப்பதற்கு அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது இதற்கான உத்தரவு வந்தவுடன் புதிய புதிய மின் கம்பங்கள் நட்டி மின்விளக்குகள் பொருத்தப்படும். மேலும் பழுதான மின்கம்பங்கள் எங்கெங்கு உள்ளது என்று கவுன்சிலர்கள் தகவல் தெரிவித்தால் அவை புதிய மின்கம்பங்கள் மாற்றி அமைக்கப்படும் என்றார். கூட்டத்தில் 22 தீர்மானங்கள் ஏகமானதாக நிறைவேற்றப்பட்டன. 

கூட்டத்தில் அதிமுக கொறடா வழக்கறிஞர் மந்திரமூர்த்தி பேசியதாவது "தூத்துக்குடியில் பத்திரிக்கையாளர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்குவது சம்பந்தமாக கடந்த கூட்டத்தில் தெரிவித்திருந்தேன். தாங்களும் அரசுக்கு பரிந்துரை செய்வதாக அறிவித்தீர்கள் விரைவில் அவர்களுக்கு பட்டா கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் ஏழை மாணவ மாணவிகள் படிப்புக்காக ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். தேர்வு பயிற்சி மையம் இலவசமாக அமைக்க வேண்டும். 

இதற்காக பிரையன்ட் நகரில் மாநகராட்சிக்கு சொந்தமாக இடத்தில் பயிற்சி மையம் அமைக்கலாம். தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் விடி சிக்னல் இருந்து திரும்பி செல்வதற்கு போக்குவரத்து மிகவும் இடையூறாக உள்ளது இதனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் பாதையை ராஜாஜி பூங்கா அருகே மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் இவ்வாறு அவர் பேசினார் 

திமுக உறுப்பினர் சரவணகுமார் பேசும்போது "தூத்துக்குடி முத்தையாபுரம் முள்ளக்காடு பகுதிகள் மாநகராட்சியுடன் புதிதாக இணைக்கப்பட்ட பகுதியாகும். இங்கு தற்போது புதிதாக ரோடுகள் அமைக்கப்பட்டு வருகிறது இந்த ரோடுகள் அனைத்தும் தரம் குறைந்த வாரியாக அமைக்கப்பட்டதால் ரோடுகள் அனைத்தும் பெயர்ந்து வந்து விட்டன. இதனால் போக்குவரத்துக்கு லாயக்கில்லாத ரோடாக உள்ளது. ஒப்பந்ததாரருக்கு பில் பாஸ் பண்ண கூடாது. இந்த ரோடு வேலைகள் அனைத்தும் முடிந்த பின்பு ஆய்வு செய்ய வேண்டும் என்றார். மேலும் கவுன்சிலர்கள் பலர், தங்களது வார்டுகளில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்து தரும்படி பேசினர். 


மக்கள் கருத்து

Antony Paul Raj PDec 31, 2025 - 09:25:36 PM | Posted IP 162.1*****

Very good observation Tamil Selvan.. congratulations

தமிழ்ச்செல்வன்Dec 31, 2025 - 03:25:59 PM | Posted IP 104.2*****

தூத்துக்குடியில் சாலையை உயர்த்திய அளவுக்கு மின்கம்பங்களை உயர்த்தவில்லை. எனவே எல்லா இடங்களிலும் மின்கம்பங்கள் தாழ்வாக இருக்கிறது. உயிர்பலி ஏற்படும் முன் கம்பங்களை உயர்த்தினால் நல்லது.....

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Tirunelveli Business Directory