» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தமிழக அரசு வழங்கிய வீட்டுமனைகள் ஆக்கிரமித்து விற்பனை: ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு!

புதன் 31, டிசம்பர் 2025 3:53:48 PM (IST)



கோவில்பட்டியில் தமிழக அரசு வழங்கிய வீட்டுமனைகள் ஆக்கிரமித்து விற்பனை செய்யப்படுவதாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் முறையிட்டு மனு அளித்தனர். 

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி வட்டம், இலுப்பையூரணி ஊராட்சியில் தமிழக அரசு 118 பேருக்கு இலவச வீட்டு மனைகளை வழங்கி உள்ளது. அந்த நிலத்தை கோவில்பட்டி வட்டாட்சியர் அளந்து கல் நாட்டிய பிறகு தனிநபர் ஆக்கிரமித்து விற்பனை செய்து வருவதாகவும், இதுகுறித்து தகவல் அறிந்து பட்டாக்களை பெற்ற பயனாளர்கள் சென்ற போது தங்களை ஆக்கிரமிப்பாளர்கள் மிரட்டி விரட்டுவதாகவும், எனவே இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, பொதுமக்கள், கட்சி நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியர் இளம்பகவத்தை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

அதில், தமிழக அரசு வழங்கிய இலவச வீட்டு மனைகளை அளவீடு செய்து கல் நாட்டப்பட்ட இடங்களை மீட்டு உரிய பயனாளிகளுக்கே வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று மனுவில் கோரிக்கை விடுத்து உள்ளனர். 

மூவேந்தர் மருத முன்னேற்றக் கழக நிறுவனத் தலைவர் அன்பரசு, மாவட்ட செயலாளர் பேச்சிமுத்து, மாவட்ட இளைஞரணி செயலாளர் பால்துரை, மாவட்ட மகளிர் அணி செயலாளர் மணி மற்றும் நிர்வாகிகள் ஒன்றிய செயலாளர் பொன்மாடசாமி, மகளிர் அணி செயலாளர் முத்துலட்சுமி உட்பட நிலப்பட்டா பெற்ற பயனாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டு கொண்டனர்.


மக்கள் கருத்து

செண்பகவள்ளி ராJan 2, 2026 - 06:58:03 AM | Posted IP 104.2*****

ஆமாம் எனக்கு அரசு வழங்கிய நிலத்தை விற்பனை செய்துயுள்ளார்கள், அரசு கண்டிப்பாக நடவேடிக்கை எடுக்க வேண்டும்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Tirunelveli Business Directory