» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
தூத்துக்குடியில் 60 ஆண்டு கால ஆலமரத்தை வெட்ட முயற்சி : பாஜகவினர் முற்றுகையால் தடுக்கப்பட்டது!
சனி 7, பிப்ரவரி 2026 8:16:04 AM (IST)

தூத்துக்குடியில் 60 ஆண்டு கால பழமையான ஆலமரத்தை வெட்ட முயன்றதை பாஜகவினர் முற்றுகையிட்டு தடுத்து நிறுத்தினர்.
தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட மேற்கு மண்டலம், பி & டி காலனி பகுதியில் சுமார் 60 ஆண்டுகள் பழமையான ஆலமரம் ஒன்று நேற்று மாநகராட்சி சார்பில் வெட்டப்பட இருந்தது. சுற்றுசூழலுக்கு முக்கியத்துவம் வாய்ந்த இந்தப் பழமையான மரத்தை வெட்டுவதற்கு அப்பகுதி பொதுமக்கள் - பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இது குறித்து பாஜகவினர் உடனடியாக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கவனத்திற்கு கொண்டு சென்றனர். மாநிலத் தலைவரின் அறிவுறுத்தலின் பேரில், தூத்துக்குடி தெற்கு மாவட்டத் தலைவர் சித்ராங்கதன் வழிகாட்டுதலில், பாஜகவினர் திரளாக சம்பவ இடத்தில் குவிந்தனர்.
மாநகராட்சி பணியாளர்கள் மரத்தை வெட்ட முயன்றபோது, அங்கு வந்த பாஜகவினர் மற்றும் பொதுமக்கள் இணைந்து மரத்தை வெட்ட விடாமல் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் தீவிரத்தை உணர்ந்த ஒப்பந்தத் தொழிலாளர்கள் அங்கிருந்து வெளியேறினர்.
இதனைத் தொடர்ந்து, அனுமதியின்றி பழமையான மரத்தை வெட்ட முயன்றது குறித்து பாஜக சார்பில் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று உடனடியாகச் செயல்பட்டு இயற்கை வளத்தைக் காத்த பாஜகவினரின் இந்த நடவடிக்கையை அப்பகுதி மக்கள் பாராட்டியுள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வீட்டில் வைத்து மனைவிக்கு பிரசவம் பார்த்த கணவர் கைது : நெல்லையில் பரபரப்பு
சனி 7, பிப்ரவரி 2026 5:40:09 PM (IST)

தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட் பிப்.17-ல் தாக்கல்: பேரவைத் தலைவர் அப்பாவு பேட்டி!
சனி 7, பிப்ரவரி 2026 4:03:18 PM (IST)

நெல்லையில் பொருநை புத்தகத் திருவிழா பிப்.10ஆம் தேதி தொடக்கம்: ஆட்சியர் சுகுமார் தகவல்
சனி 7, பிப்ரவரி 2026 12:27:12 PM (IST)

வடக்கு பச்சையாறு நீர்தேக்கத்திலிருந்து பிசான சாகுபடிக்கு தண்ணீர் திறப்பு!
வெள்ளி 6, பிப்ரவரி 2026 4:35:42 PM (IST)

சங்கரன்கோவிலில் முன்னாள் கவுன்சிலர் மகன் கொலை: உறவினர்கள் மறியல்!!
வெள்ளி 6, பிப்ரவரி 2026 12:05:02 PM (IST)

நெல்லை மாவட்டத்திற்கு ரூ.21,822.19 கோடி முன்னுரிமைத் துறை கடன் வாய்ப்பு - ஆட்சியர் தகவல்!
வியாழன் 5, பிப்ரவரி 2026 5:38:55 PM (IST)


உண்மFeb 7, 2026 - 10:03:48 AM | Posted IP 162.1*****