» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
தூத்துக்குடி - மும்பை இடையே நேரடி விமான சேவை: நவி மும்பை விமான நிலைய அதிகாரியிடம் மனு!
சனி 7, பிப்ரவரி 2026 11:23:06 AM (IST)

தூத்துக்குடி - மும்பை இடையே நேரடி விமான சேவை தொடங்க வேண்டும் என்று நவி மும்பை விமான நிலைய அதிகாரியிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
தென்தமிழகத்தின் முக்கிய தொழில் நகரமான தூத்துக்குடியையும், நாட்டின் நிதித் தலைநகரான மும்பையையும் இணைக்கும் வகையில் நேரடி விமான சேவையைத் தொடங்க வலியுறுத்தி, மும்பை விழித்தெழு இயக்கம் சார்பில் நவி மும்பை சர்வதேச விமான நிலையத்தின் முனைய மேலாளரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
மத்திய அரசின் சீரிய முயற்சியால் தூத்துக்குடி விமான நிலையம் தற்போது சர்வதேச தரத்திற்கு தரம் உயர்த்தப்பட்டுள்ளது. 3,115 மீட்டர் நீளமுள்ள புதிய ஓடுதளம் (Runway) மற்றும் அதிநவீன பயணிகள் முனையம் ஆகியவை செயல்பாட்டிற்கு வந்துள்ள சூழலில், பெரிய ரக ஏர்பஸ் மற்றும் போயிங் விமானங்கள் வந்து செல்ல ஏதுவாக வசதிகள் உள்ளன.
"தூத்துக்குடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான மக்கள் மும்பையில் வசித்து வருகின்றனர். அவர்களின் நீண்ட காலக் கோரிக்கையான நேரடி விமான சேவையைத் தொடங்கினால், பயண நேரம் குறையும் என்பதோடு வர்த்தக ரீதியாகவும் இரு நகரங்களும் பெரும் பலன் பெறும். குறிப்பாக நவி மும்பை விமான நிலையம் செயல்பாட்டிற்கு வரும்போது, தூத்துக்குடிக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்," என ஸ்ரீதர் தமிழன் தனது மனுவில் வலியுறுத்தியுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வீட்டில் வைத்து மனைவிக்கு பிரசவம் பார்த்த கணவர் கைது : நெல்லையில் பரபரப்பு
சனி 7, பிப்ரவரி 2026 5:40:09 PM (IST)

தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட் பிப்.17-ல் தாக்கல்: பேரவைத் தலைவர் அப்பாவு பேட்டி!
சனி 7, பிப்ரவரி 2026 4:03:18 PM (IST)

நெல்லையில் பொருநை புத்தகத் திருவிழா பிப்.10ஆம் தேதி தொடக்கம்: ஆட்சியர் சுகுமார் தகவல்
சனி 7, பிப்ரவரி 2026 12:27:12 PM (IST)

வடக்கு பச்சையாறு நீர்தேக்கத்திலிருந்து பிசான சாகுபடிக்கு தண்ணீர் திறப்பு!
வெள்ளி 6, பிப்ரவரி 2026 4:35:42 PM (IST)

சங்கரன்கோவிலில் முன்னாள் கவுன்சிலர் மகன் கொலை: உறவினர்கள் மறியல்!!
வெள்ளி 6, பிப்ரவரி 2026 12:05:02 PM (IST)

நெல்லை மாவட்டத்திற்கு ரூ.21,822.19 கோடி முன்னுரிமைத் துறை கடன் வாய்ப்பு - ஆட்சியர் தகவல்!
வியாழன் 5, பிப்ரவரி 2026 5:38:55 PM (IST)


BabuFeb 7, 2026 - 03:45:00 PM | Posted IP 172.7*****