» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
234 தொகுதிகளிலும் மு.க.ஸ்டாலின் தான் வேட்பாளர் : தூத்துக்குடியில் சபரீசன் வேண்டுகோள்
செவ்வாய் 10, பிப்ரவரி 2026 10:20:07 AM (IST)

வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில், 234 தொகுதிகளிலும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினே வேட்பாளர் என்பதை மனதில் வைத்து உடன்பிறப்புகள் ஒற்றுமையுடன் பணியாற்ற வேண்டும் என முதலமைச்சரின் மருமகன் சபரீசன் தூத்துக்குடியில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பேசினார்.
தமிழக முதலமைச்சர் மற்றும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், 2026 சட்டமன்றத் தேர்தலில் 200 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்ற இலக்கை நிர்ணயித்துள்ளார். இதற்காக அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், கே.என்.நேரு, எ.வ.வேலு, தங்கம் தென்னரசு மற்றும் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் அடங்கிய ஒருங்கிணைப்புக் குழு ஏற்கனவே அமைக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. சமீபத்தில் 234 தொகுதிகளுக்குமான தேர்தல் பார்வையாளர்களையும் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்திருந்தார்.
தென் மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வருகை தந்த சபரீசன், தூத்துக்குடியில் உள்ள தனியார் விடுதியில் வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட திமுக நிர்வாகிகளுடன் கலந்துரையாடினார். இந்த கூட்டத்தில் அவர் பேசியதாவது: "கழகத் தலைமைக்கும், முதலமைச்சருக்கும் உறுதுணையாக இருந்து கட்சிப் பணிகளைச் செம்மையாகச் செய்ய வேண்டும். அரசின் மக்கள் நலத்திட்டங்களையும், கட்சியின் கொள்கைகளையும் மக்களிடம் கொண்டு சேர்த்து வாக்கு வங்கியை அதிகரிக்க வேண்டும்.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி வெற்றி பெற்று நாட்டிற்கே வழிகாட்டியது. அதேபோல், வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் 'தளபதி' தான் வேட்பாளர் என்ற எண்ணத்தோடு அனைவரும் ஒற்றுமையுடன் களப்பணியாற்ற வேண்டும். உழைப்புக்கு அங்கீகாரம்: "கட்சிக்காக உண்மையாக உழைப்பவர்களுக்கு நிச்சயம் நல்ல எதிர்காலம் அமையும்" என அவர் தொண்டர்களை உற்சாகப்படுத்தினார்.
இந்தக் கூட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதா ஜீவன், மீன்வளம் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன், சட்டமன்ற உறுப்பினர்கள் மார்க்கண்டேயன், சண்முகையா மற்றும் ஒன்றிய செயலாளர்கள் இளையராஜா, ராமசாமி, சரவணக்குமார், காசிவிஸ்வநாதன் உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
தமிழ்ச்செல்வன்Feb 12, 2026 - 05:57:33 PM | Posted IP 172.7*****
கனிமொழியை அப்புறப்படுத்தி விட்டு டெல்லியில் இனி சபரீசன்தான் எல்லாம்.... அதற்கான முன்னோட்டம்தான் இது....
அடுத்து தூத்துக்குடியில் சபரீசன் போட்டியிட்டாலும் இடலாம்....
மேலும் தொடரும் செய்திகள்

பிப்.14ல் பொது விநியோகத்திட்ட மக்கள் குறைதீர் முகாம் : ஆட்சியர் தகவல்
வியாழன் 12, பிப்ரவரி 2026 5:21:45 PM (IST)

சிலம்பு எக்ஸ்பிரசை தினசரி ரயிலாக மாற்ற வேண்டும்: மத்திய அமைச்சரிடம் தென்காசி எம்.பி. கோரிக்கை!
வியாழன் 12, பிப்ரவரி 2026 12:02:53 PM (IST)

தீராக்காதல் திருக்குறள் நாட்டிய நாடக நிகழ்ச்சி : சபாநாயகர் அப்பாவு தொடங்கி வைத்தார்!
செவ்வாய் 10, பிப்ரவரி 2026 5:03:39 PM (IST)

கொத்தடிமைத் தொழிலாளர் ஒழிப்பு தின கையெழுத்து இயக்கம்: ஆட்சியர் தொடங்கி வைத்தார்
திங்கள் 9, பிப்ரவரி 2026 4:18:01 PM (IST)

மகாசிவராத்திரி விழா: பஞ்சபூத திருத்தலங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்!
திங்கள் 9, பிப்ரவரி 2026 10:24:45 AM (IST)

கல்லிடைக்குறிச்சி அரபிக் கல்லூரி முதல்வருக்கு பாராட்டு விழா!
திங்கள் 9, பிப்ரவரி 2026 7:39:59 AM (IST)


JOSEPHFeb 13, 2026 - 01:33:05 PM | Posted IP 162.1*****