» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

சமூக ஆர்வலர் வழக்கறிஞர் மணப்பாடு கயஸ் காலமானார்

புதன் 11, பிப்ரவரி 2026 10:29:35 PM (IST)

தூத்துக்குடி மாவட்ட நாட்டுப் படகு மீனவர் சங்கத் தலைவரும் சமூக போராளியுமான வழக்கறிஞர் மணப்பாடு கயஸ் காலமானார்.

தமிழ்நாடு மீனவர் காங்கிரஸின் முன்னாள் மாநில துணைத்தலைவரும், தூத்துக்குடி மாவட்ட நாட்டுப் படகு மீனவர் சங்கத் தலைவரும் சமூக போராளியுமான வழக்கறிஞர் மணப்பாடு எஸ்.ஜே.கயஸ் இன்று (பிப்.11.02.2026) காலமானார். அன்னாரின்  நல்லடக்கம் வெள்ளிக்கிழமை (13-2-26) மாலை 4 மணிக்கு மணப்பாடு தூய ஆவி ஆலயத்தில் வைத்து நடைபெறும் என்று அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

இவர் நாட்டுப் படகு மீனவர்களின் உரிமைக்காகவும், நிலக்கரி கையாளும் தளத்திற்கு எதிராகவும், மீனவர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களை நடத்தியவர். தூத்துக்குடி மற்றும் நெல்லை மாவட்ட நாட்டுப்படகு மீனவர்களின் நலன் சார்ந்த விவகாரங்களில் இவர் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தார் என்பது குறிப்பிடதக்கது.


மக்கள் கருத்து

Venkatesh RamaiyaFeb 12, 2026 - 10:00:33 PM | Posted IP 104.2*****

RIP

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Tirunelveli Business Directory