» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தூத்துக்குடி மாநகராட்சி வண்ண விளக்கு திட்டத்தில் முறைகேடு? விசாரணை நடத்த பாஜக வலியுறுத்தல்!

வியாழன் 12, பிப்ரவரி 2026 4:32:39 PM (IST)

தூத்துக்குடி மாநகராட்சியில் ரூ.98 லட்சத்தில் அமைக்கப்பட்ட வண்ண விளக்குகள் செயலிழந்தது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்று பாஜக வலியுறுத்தியுள்ளது. 

தூத்துக்குடி மாநகராட்சியில் ‘நமக்கு நாமே’ திட்டத்தின் கீழ் ரூ.98 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட அலங்கார வண்ண விளக்குகள், சில மாதங்களிலேயே செயலிழந்து கிடப்பது முறைகேடு மற்றும் நிர்வாக அலட்சியத்தைக் காட்டுவதாக பாஜக மாவட்ட துணைத் தலைவர் வழக்கறிஞர் சண்முகசுந்தரம் குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், "தூத்துக்குடி மாநகராட்சியில் மார்ச் 2024-ல் ரூ.59.84 லட்சத்தில் தேசியக்கொடி வண்ண விளக்குகளும், ரூ.38 லட்சத்தில் சாதாரண வண்ண விளக்குகளும் பொருத்தப்பட்டன. மக்கள் பங்களிப்புடன் செயல்படுத்தப்பட்ட இத்திட்டம் குறுகிய காலத்திலேயே தோல்வியடைந்துள்ளது மக்கள் பணத்தை வீணடிப்பதாகும்.

ஒப்பந்த நகல் மற்றும் தரப் பரிசோதனை அறிக்கையைப் பொதுமக்களுக்கு வெளியிடாதது ஏன்? பராமரிப்பு காலம் முடிவதற்குள் விளக்குகள் அணைந்தது குறித்து ஒப்பந்ததாரர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? பணிகளுக்கு இறுதி ஆய்வு சான்றிதழ் வழங்கப்பட்டதா? இதற்கான நிதி எந்தத் தீர்மானத்தின் கீழ் ஒதுக்கப்பட்டது?

இது தொடர்பாகத் துறை ரீதியான விசாரணை நடத்தி, பொறுப்பற்ற அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆவணங்களை வெளியிடத் தவறினால் பாஜக சார்பில் சட்டப்பூர்வப் போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்துள்ளார். 


மக்கள் கருத்து

தூத்துக்குடிFeb 12, 2026 - 09:27:35 PM | Posted IP 172.7*****

துட்டு துட்டு துட்டு பணம் பணம் பணம்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Tirunelveli Business Directory