» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
தூத்துக்குடியில் 123 டாஸ்மாக் கடைகள் அடைப்பு : ஊழியர்கள் வேலைநிறுத்தம் அறிவிப்பு
புதன் 18, பிப்ரவரி 2026 8:01:12 AM (IST)
பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்டத்தில் டாஸ்மாக் ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.
பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தூத்துக்குடி மாவட்டத்தில் டாஸ்மாக் ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். இதன் காரணமாக மாவட்டம் முழுவதும் உள்ள 123 டாஸ்மாக் கடைகளும் இன்று இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் உள்ள டாஸ்மாக் மேலாளர் அலுவலகம் முன்பு, இதுதொடர்பான வாயிற்கூட்டம் நடைபெற்றது. ஏ.ஐ.டி.யு.சி டாஸ்மாக் பணியாளர் சங்கத்தின் மாநிலத் துணைத்தலைவர் நெப்போலியன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் ஊழியர்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.
இதுகுறித்து தொழிற்சங்க நிர்வாகிகள் கூறுகையில், கடந்த 23 ஆண்டுகளாகப் பணியாற்றி வரும் ஊழியர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். அனைத்து ஊழியர்களுக்கும் ஓய்வூதியம் மற்றும் காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். என்ற எங்களது நியாயமான கோரிக்கைகளுக்காகப் பல ஆண்டுகளாகப் போராடி வருகிறோம்.
ஆனால், இதுவரை எவ்வித தீர்வும் காணப்படவில்லை. எனவே, தமிழக அரசு உடனடியாகத் தலையிட்டு எங்களது வாழ்வாதாரக் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்," என வலியுறுத்தினர். இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் அனைத்துத் தொழிற்சங்கங்களும் கூட்டாக இணைந்து பங்கேற்பதால், இன்று ஒருநாள் மட்டும் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 123 மதுபானக் கடைகளும் மூடப்பட்டிருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மது போதையில் ஆட்டோ ஓட்டி 5 பள்ளி மாணவர்கள் காயம் : ஓட்டுநர் மீது கடும் பிரிவில் வழக்கு
புதன் 18, பிப்ரவரி 2026 5:53:22 PM (IST)

தேவாலய நுழைவுவாயில் கட்டுவதில் மோதல்: 6 பேர் மீது வழக்குப்பதிவு; வீடியோ வைரல்!
செவ்வாய் 17, பிப்ரவரி 2026 8:26:34 PM (IST)

திருநெல்வேலி வாக்குச்சாவடி மையங்களில் ஆட்சியர் சுகுமார் ஆய்வு!
செவ்வாய் 17, பிப்ரவரி 2026 5:31:21 PM (IST)

வங்கியில் தீ விபத்து : முக்கிய ஆவணங்கள் எரிந்து சாம்பல்! பணம், நகைகளுக்கு சேதம் இல்லை!
செவ்வாய் 17, பிப்ரவரி 2026 8:16:58 AM (IST)

நெல்லையில் மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை: கணித ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது
செவ்வாய் 17, பிப்ரவரி 2026 8:11:14 AM (IST)

சட்டமன்ற பொதுத்தேர்தல் முன்னேற்பாடு பணிகள் ஆலோசனைக் கூட்டம்: ஆட்சியர் பங்கேற்பு
திங்கள் 16, பிப்ரவரி 2026 5:01:46 PM (IST)


வாழ்த்துகள்Feb 18, 2026 - 09:33:24 AM | Posted IP 162.1*****