» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
ஸ்டெர்லைட் ஆலையைத் தரைமட்டமாக்க வேண்டும் : வைகோ ஆவேசம்!
புதன் 18, பிப்ரவரி 2026 8:31:46 AM (IST)
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை முழுமையாக அகற்ற வேண்டும் என்று தமிழக அரசை ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தூத்துக்குடி மாநகர மக்கள் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாகப் பல போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். வீதி தொடங்கி நீதிமன்றம், ஆட்சி மற்றும் அதிகார மையங்கள் வரை எனத் தொடர்ந்து ஸ்டெர்லைட் நச்சு ஆலைக்கு எதிராக மக்கள் தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்து வருகின்றனர்.தற்போது 'பசுமை காப்பர்' என்ற பெயரில் ஸ்டெர்லைட் நிர்வாகம் தூத்துக்குடிக்குள் நுழைய முயல்வதை வைகோ கடுமையாக விமர்சித்துள்ளார். பழைய தொழிலையே புதிய பெயரில் மீண்டும் நிலைநிறுத்த நிர்வாகம் முயற்சிக்கிறது. இதனை "பழைய கள்ளைப் புதிய மொந்தையில் ஊற்றுவது போன்ற செயல்" என்றும், "அரிதாரம் பூசிய புதிய அவதாரம்" என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
விஞ்ஞானிகளின் துணையோடு ஒரு போலி அறிக்கையைத் தயாரித்து, அதன் மூலம் ஆலை மீண்டும் இயங்க அனுமதி கோரி தமிழக முதலமைச்சரையும், நீதிமன்றத்தையும் ஸ்டெர்லைட் நிர்வாகம் அணுகியுள்ளது. "ஸ்டெர்லைட் எனும் நச்சுப் பூதம் நரித் தந்திரத்துடன் வேறு வடிவில் நுழைய முயற்சிக்கிறது. இந்த ஆலையை அடியோடு அகற்றுமாறு தமிழக அரசை வேண்டுகிறேன்." என வைகோ தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மது போதையில் ஆட்டோ ஓட்டி 5 பள்ளி மாணவர்கள் காயம் : ஓட்டுநர் மீது கடும் பிரிவில் வழக்கு
புதன் 18, பிப்ரவரி 2026 5:53:22 PM (IST)

தேவாலய நுழைவுவாயில் கட்டுவதில் மோதல்: 6 பேர் மீது வழக்குப்பதிவு; வீடியோ வைரல்!
செவ்வாய் 17, பிப்ரவரி 2026 8:26:34 PM (IST)

திருநெல்வேலி வாக்குச்சாவடி மையங்களில் ஆட்சியர் சுகுமார் ஆய்வு!
செவ்வாய் 17, பிப்ரவரி 2026 5:31:21 PM (IST)

வங்கியில் தீ விபத்து : முக்கிய ஆவணங்கள் எரிந்து சாம்பல்! பணம், நகைகளுக்கு சேதம் இல்லை!
செவ்வாய் 17, பிப்ரவரி 2026 8:16:58 AM (IST)

நெல்லையில் மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை: கணித ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது
செவ்வாய் 17, பிப்ரவரி 2026 8:11:14 AM (IST)

சட்டமன்ற பொதுத்தேர்தல் முன்னேற்பாடு பணிகள் ஆலோசனைக் கூட்டம்: ஆட்சியர் பங்கேற்பு
திங்கள் 16, பிப்ரவரி 2026 5:01:46 PM (IST)


MARIAPPANFeb 18, 2026 - 11:30:43 AM | Posted IP 162.1*****