» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
திமுகவை வீழ்த்த அனைவரும் இணைய வேண்டும் : தவெக குறித்து கடம்பூர் ராஜூ கருத்து
புதன் 11, மார்ச் 2026 4:39:19 PM (IST)
எங்களைப் பொறுத்தவரை திமுகவை வீழ்த்த அனைவரும் இணைய வேண்டும் என்பதே எண்ணம் என்று முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே செண்பகபேரியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் புதிய கலையரங்கம் கட்டுவதற்கான பணிகளை முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்தார்.தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: தீப்பெட்டித் தொழிலுக்குச் சவாலாக உள்ள பிளாஸ்டிக் லைட்டர் பயன்பாடு, மெழுகு தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வு குறித்து உற்பத்தியாளர்கள் மத்திய அமைச்சர் பியூஸ் கோயலை சந்தித்து முறையிட்டுள்ளனர். இது குறித்து மத்திய அரசு விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கும் என அமைச்சர் உறுதி அளித்துள்ளார்.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ள நிலையில் கூட்டணிக் குறித்துக் கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் பதிலளிக்கையில்: ஏற்கனவே உள்ள கூட்டணி என்றாலும் தொகுதிப் பங்கீட்டில் அவர்களுக்குள் உடன்பாடு எட்டப்படவில்லை. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் மதிமுக போன்ற கட்சிகளிடையே அதிருப்தி நிலவுகிறது. குறிப்பாக மதிமுகவின் நிலை கேள்விக்குறியாக உள்ளது.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் எவ்விதப் பிரச்சினையும் இல்லை. அதிமுக தான் இக்கூட்டணிக்குத் தலைமை தாங்கும். அதிமுக தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெறும் என்றும், எடப்பாடி பழனிசாமி தான் முதலமைச்சர் என்றும் மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்.
கரூர் சம்பவம் தொடர்பாக தவெக தலைவர் விஜய் சிபிஐ விசாரணைக்கு ஆஜரானது வழக்கமான நடைமுறைதான், இதில் அரசியல் இல்லை. திமுகவை வீழ்த்த வேண்டும் என்பதில் அவர் உறுதியாக உள்ளார். எங்களைப் பொறுத்தவரை திமுகவை வீழ்த்த அனைவரும் இணைய வேண்டும் என்பதே எண்ணம். ராமதாஸ் - சசிகலா சந்திப்பின் சாராம்சம் குறித்து அவர்கள் தரப்பில் அதிகாரப்பூர்வத் தகவல் வெளியான பின்னரே கருத்து கூற முடியும். யூகங்களின் அடிப்படையில் பதில் கூற முடியாது என்று தெரிவித்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மண்டல தேர்தல் அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு: ஆட்சியர் சுகுமார் தொடங்கி வைத்தார்
புதன் 11, மார்ச் 2026 4:56:24 PM (IST)

நெல்லையில் 11 இடங்களில் சோதனைச்சாவடி: எல்லை பாதுகாப்பு படையினர் தீவிர வாகன சோதனை!
புதன் 11, மார்ச் 2026 8:40:02 AM (IST)

துணை நடிகைக்கு காதல் தொல்லை கொடுத்த நெல்லை வாலிபர் வெட்டிக்கொலை: 4 பேர் கைது
செவ்வாய் 10, மார்ச் 2026 8:34:31 PM (IST)

காவல்துறையில் குறிப்பிட்ட சமூகத்தின் ஆதிக்கம்? ஷியாம் கிருஷ்ணசாமி குற்றச்சாட்டு!
செவ்வாய் 10, மார்ச் 2026 3:14:37 PM (IST)

நெல்லை - மங்களூரு புதிய ரயில் சேவை: பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்கிறார்
செவ்வாய் 10, மார்ச் 2026 7:59:23 AM (IST)

தேர்தல் விதிமுறைகளை முறையாகப் பின்பற்றிட வேண்டும்: மாவட்ட வருவாய் அலுவலர் அறிவுறுத்தல்
சனி 7, மார்ச் 2026 3:44:13 PM (IST)

