» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
நெல்லை - மங்களூரு புதிய ரயில் சேவை: பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்கிறார்
செவ்வாய் 10, மார்ச் 2026 7:59:23 AM (IST)

நெல்லை மற்றும் கர்நாடக மாநிலம் மங்களூரு இடையே புதிய வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி நாளை (புதன்கிழமை) காணொலி காட்சி மூலம் தொடங்கி வைக்கிறார்.
நெல்லை சந்திப்பில் இருந்து மங்களூருவுக்குப் புதிய வாராந்திர ரயில் (வண்டி எண்: 16707 / 16708) சேவை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் நெல்லையிலிருந்து ஒவ்வொரு புதன்கிழமையும் பிற்பகல் 3:45 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 6:55 மணிக்கு மங்களூரு சென்றடையும்.
மறுமார்க்கத்தில், மங்களூருவிலிருந்து வியாழக்கிழமை தோறும் மதியம் 1 மணிக்கு புறப்படும் ரயில், மறுநாள் காலை 7:45 மணிக்கு நெல்லை வந்தடையும்.
நின்று செல்லும் நிலையங்கள்: இந்த ரயில் கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், பழனி, உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி, கொல்லங்கோடு, பாலக்காடு டவுன், பாலக்காடு, சோரனூர், திரூர், கோழிக்கோடு, வடகரை, தலசேரி, கண்ணூர், காஞ்சங்காடு மற்றும் காசர்கோடு ஆகிய நிலையங்களில் நின்று செல்லும்.
ரயில் பெட்டிகள் விவரம்: இந்த ரயிலில் மொத்தம் 17 எல்.எச்.பி. (LHB) ரக பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன. இதில் 4 பொதுப் பெட்டிகள், 8 மூன்றடுக்கு படுக்கை வசதி கொண்ட பெட்டிகள், 2 மூன்றடுக்கு ஏ.சி. பெட்டிகள், 1 இரண்டடுக்கு ஏ.சி. பெட்டி, ஒரு மாற்றுத்திறனாளி பெட்டி மற்றும் ஒரு சரக்கு பெட்டியுடன் கூடிய கார்டு பெட்டி ஆகியவை அடங்கும்.
திருச்சியில் நாளை நடைபெறும் விழாவில் கலந்து கொள்ளும் பிரதமர் நரேந்திர மோடி, அங்கிருந்தபடி காணொலி காட்சி மூலம் இந்த ரயில் சேவையைத் தொடங்கி வைக்கிறார். இதனை முன்னிட்டு நெல்லை சந்திப்பில் முக்கியப் பிரமுகர்கள் மற்றும் ரயில்வே அதிகாரிகள் கலந்து கொள்ளும் சிறப்பு நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நர்சிங் மாணவிக்கு பாலியல் தொல்லை: தலைமறைவாக இருந்த தென்காசி தனியார் கல்லூரி தாளாளர் கைது!
வியாழன் 30, ஜூலை 2026 12:30:12 PM (IST)

அரசுப் போக்குவரத்துக் கழக நெல்லை மண்டலப் பொது மேலாளராக மோகன் குமார் பொறுப்பேற்பு!
வியாழன் 30, ஜூலை 2026 11:10:30 AM (IST)

குற்றாலம் அருவிகளில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் உற்சாக குளியல்!
வியாழன் 30, ஜூலை 2026 8:30:49 AM (IST)

இளைஞர்கள், கல்லூரி மாணவர்கள் தொடர்ந்து இரத்த தானம் செய்ய வேண்டும்: ஆட்சியர் வேண்டுகோள்
புதன் 29, ஜூலை 2026 12:47:15 PM (IST)

சங்கரன்கோவிலில் ஆடித்தபசு திருவிழா கோலாகலம்: பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!
புதன் 29, ஜூலை 2026 8:32:40 AM (IST)

நெல்லை பட்டமளிப்பு விழாவில் மாணவிகள் கண்ணீர் : இருகரம் கூப்பி மன்னிப்பு கேட்ட ஆளுநர் அர்லேகர்!
செவ்வாய் 28, ஜூலை 2026 3:52:31 PM (IST)


