» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தூத்துக்குடி 3ஆவது மைல் முதல் திரேஸ்புரம் வரை புதிய சாலைப் பணி: மேயர் தொடங்கி வைத்தார்!

வெள்ளி 13, மார்ச் 2026 10:46:43 AM (IST)



தூத்துக்குடி மூன்றாவது மைல் முதல் திரேஸ்புரம் வரை புதிய தார் சாலைப் பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி தொடங்கி வைத்தார்.

தூத்துக்குடி மாநகராட்சியின் பல்வேறு பகுதிகளில் புதிய சாலை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, மாநகராட்சிக்குட்பட்ட பாதாள சாக்கடைத் திட்டப் பகுதியினை ஒட்டியுள்ள ஓடை ரோட்டின் ஒரு புறத்தில், மூன்றாவது மைல் முதல் திரேஸ்புரம் வரை தார் சாலை அமைக்கும் பணிகளை மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்வின் போது மாநகராட்சி ஆணையர் பிரியங்கா, மாமன்ற உறுப்பினர் கனகராஜ் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள், திமுக நிர்வாகிகள் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் உடனிருந்தனர்.


மக்கள் கருத்து

BabuMar 13, 2026 - 07:09:33 PM | Posted IP 172.7*****

bukkel odai pakkam road pottavan kita kuduthu makkal yerichalai vangamal nalla road podupavridam kudukavum traffic kammiyaga bukkel odi pakkam road potangalam ana antha road irukura latchanathuku athula nan porathe ilai vandiku selavu yenna corporation la iruntha kudupanga nadavadikai yedutha mattum potathu nalla roadum podunga

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Tirunelveli Business Directory