» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை - மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு

திங்கள் 16, மார்ச் 2026 4:50:56 PM (IST)

வீட்டிற்குள் நுழைந்து பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்து, கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தூத்துக்குடி மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 

தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் அரகே கவர்னகிரி சித்திரை வீதியைச் சேர்ந்த காசி மகன் தமிழழகன் (55) என்பவர் கடந்த 14.10.2020 அன்று வீட்டிற்குள் நுழைந்து பெண்ணுக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்து கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து புகாரின் பேரில் கடம்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தின் அப்போதைய ஆய்வாளர் மாரியம்மாள் விசாரணை நடத்தி, தமிழழகன் மீது வழக்கு பதிவு செய்தார். 

இந்த வழக்கு தூத்துக்குடி மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கின் சாட்சியங்கள் மற்றும் ஆதாரங்களை ஆய்வு செய்த நீதிபதி முருகன், தமிழழகன் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதையடுத்து அவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 5,000 ரூபாய் அபராதம். அபராதத்தைச் செலுத்தத் தவறினால் கூடுதலாக ஒரு ஆண்டு சாதாரண சிறை தண்டனை. 

பிரிவு 376 உடன் இணைந்த 511-ன் கீழ் 10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 5,000 ரூபாய் அபராதம். அபராதத்தைச் செலுத்தத் தவறினால் கூடுதலாக ஒரு ஆண்டு சாதாரண சிறை தண்டனை. இந்த இரண்டு தண்டனைகளையும் குற்றவாளி ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என நீதிபதி தனது தீர்ப்பில் உத்தரவிட்டார். இதன் மூலம் குற்றவாளிக்கு மொத்தம் 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், மொத்தம் 10,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இவ்வழக்கில் அரசுத் தரப்பில் சிறப்பு வழக்கறிஞர் எல்லம்மாள் ஆஜராகி வாதாடினார்.  


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Tirunelveli Business Directory