» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த நபருக்கு சாகும் வரை சிறை தண்டனை!
வெள்ளி 27, மார்ச் 2026 12:29:29 PM (IST)
4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த நபருக்கு, சாகும் வரை சிறை தண்டனை விதித்து திருநெல்வேலி மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 2023-ஆம் ஆண்டு, திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த லட்சுமணகுமார் (45) என்பவர், 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளார். இது குறித்து சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில், சேரன்மகாதேவி அனைத்து மகளிர் காவல் நிலையத்தினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். அப்போதைய காவல் ஆய்வாளர் அன்னபூரணி இந்த வழக்கை விசாரணை செய்து, குற்றவாளியைக் கைது செய்தார்.இந்த வழக்கின் விசாரணை திருநெல்வேலி மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. நேற்று வழக்கை விசாரித்த நீதிபதி சுரேஷ்குமார், குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதால், குற்றவாளி லட்சுமணகுமாருக்கு சாகும் வரை ஆயுள் சிறை தண்டனை மற்றும் ரூ. 5,000 அபராதம் விதித்துத் தீர்ப்பளித்தார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ. 3 லட்சம் நிவாரணத் தொகை வழங்கவும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டார்.
இந்த வழக்கை விரைவாகவும், திறம்படவும் கையாண்ட அதிகாரிகளை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பிரசண்ணகுமார் பாராட்டியுள்ளார். திருநெல்வேலி மாவட்டத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைக் குறைக்கக் காவல்துறை தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன் பயனாக, இந்த 2026-ஆம் ஆண்டில் மட்டும் இதுவரை 6 போக்சோ வழக்குகளில் குற்றவாளிகளுக்குத் தண்டனை பெற்றுத் தரப்பட்டுள்ளது.
இதில் 1 குற்றவாளிக்கு மரண தண்டனை, 1 குற்றவாளிக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை, 1 குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை, 1 குற்றவாளிக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதில் சமரசம் இன்றி, குற்றவாளிகள் மீது கடும் சட்ட நடவடிக்கைகள் தொடரும் என மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மக்களுக்கான த.வெ.க. ஆட்சியில் ஊழலுக்கு இடமில்லை : நெல்லையில் அமைச்சர் ஜெகதீஸ்வரி பேச்சு!
திங்கள் 24, ஆகஸ்ட் 2026 8:51:53 AM (IST)

திருமணம் செய்து கொள்வதாகக் கூறி இளம் பெண்ணை ஏமாற்றிய இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்!
சனி 22, ஆகஸ்ட் 2026 12:33:41 PM (IST)

காவல் நிலையத்தில் வாலிபர் தற்கொலை முயற்சி : தலைமை காவலர் உள்பட 2பேர் சஸ்பெண்ட்!
சனி 22, ஆகஸ்ட் 2026 11:31:58 AM (IST)

திருநெல்வேலியில் செப். 19-ல் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்: ஆட்சியர் தகவல்!
சனி 22, ஆகஸ்ட் 2026 11:09:15 AM (IST)

ஓடும் பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை: வழக்கறிஞர் அதிரடி கைது!
சனி 22, ஆகஸ்ட் 2026 8:55:08 AM (IST)

நெல்லையில் குரூப் 2 தேர்வுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் 24ஆம் தேதி தொடங்குகிறது!
வெள்ளி 21, ஆகஸ்ட் 2026 10:44:13 AM (IST)


