» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
நெல்லையில் விஜய் பிரசாரத்திற்கு 51 நிபந்தனைகள்: செங்கோட்டையன் பேட்டி
செவ்வாய் 7, ஏப்ரல் 2026 4:07:26 PM (IST)

நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மற்றும் குமரி மாவட்டங்களில் உள்ள 22 தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து நெல்லையில் நாளை விஜய் பிரச்சாரத்திற்கு 51 நிபந்தனைகளை தேர்தல் ஆணையம் விதித்துள்ளது என்று செங்கோட்டையன் தெரிவித்தார்.
தமிழக சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடும் தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க) தலைவர் விஜய், தென் மாவட்ட வேட்பாளர்களை ஆதரித்து நாளை நெல்லையில் பிரசாரம் மேற்கொள்கிறார். இதற்கான பாதுகாப்பு மற்றும் முன்னேற்பாடுகளைத் த.வெ.க நிர்வாகக் குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளர் கே.ஏ. செங்கோட்டையன் இன்று நேரில் ஆய்வு செய்தார்.
நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் உள்ள 22 தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து, நாளை (புதன்கிழமை) காலை 10 மணியளவில் விஜய் உரையாற்றுகிறார். இதற்காகப் பாளையங்கோட்டையில் அமைக்கப்பட்டு வரும் பிரம்மாண்ட பொதுக்கூட்ட மேடையைத் த.வெ.க நிர்வாகக் குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் பார்வையிட்டார். முன்னதாக கங்கைகொண்டான், ராஜகோபாலபுரம் மற்றும் கே.டி.சி. நகர் ஆகிய பகுதிகளையும் அவர் ஆய்வு செய்தார்.
ஆய்வுக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய செங்கோட்டையன் கூறியதாவது: "நெல்லையில் விஜய் அவர்கள் பரப்புரை செய்வதற்குத் தேர்தல் ஆணையம் 51 நிபந்தனைகளை விதித்துள்ளது. சட்டத்திற்கு உட்பட்ட இயக்கம் என்பதால், அனைத்து நிபந்தனைகளுக்கும் கட்டுப்பட்டு இந்தப் பொதுக்கூட்டத்தை நடத்துவோம். மற்ற தலைவர்களைக் காட்டிலும் விஜய் பிரசாரத்திற்கு மட்டும் இத்தனை கடுமையான விதிமுறைகள் விதிக்கப்படுவது ஏன் எனத் தெரியவில்லை."
தொடர்ந்து பேசிய அவர், "அதிமுகவிலிருந்து விலகி த.வெ.க-வில் இணைந்துள்ள எனக்கு, எனது தொகுதியான கோபியில் மக்கள் நல்ல தீர்ப்பை வழங்குவார்கள். தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் த.வெ.க வேட்பாளர்கள் வெற்றி பெற வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள். விஜய் அவர்கள் நாட்டை ஆள வேண்டும் என்பது மக்களின் ஆசை, அது நிச்சயம் நிறைவேறும்," எனத் தெரிவித்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மக்களுக்கான த.வெ.க. ஆட்சியில் ஊழலுக்கு இடமில்லை : நெல்லையில் அமைச்சர் ஜெகதீஸ்வரி பேச்சு!
திங்கள் 24, ஆகஸ்ட் 2026 8:51:53 AM (IST)

திருமணம் செய்து கொள்வதாகக் கூறி இளம் பெண்ணை ஏமாற்றிய இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்!
சனி 22, ஆகஸ்ட் 2026 12:33:41 PM (IST)

காவல் நிலையத்தில் வாலிபர் தற்கொலை முயற்சி : தலைமை காவலர் உள்பட 2பேர் சஸ்பெண்ட்!
சனி 22, ஆகஸ்ட் 2026 11:31:58 AM (IST)

திருநெல்வேலியில் செப். 19-ல் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்: ஆட்சியர் தகவல்!
சனி 22, ஆகஸ்ட் 2026 11:09:15 AM (IST)

ஓடும் பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை: வழக்கறிஞர் அதிரடி கைது!
சனி 22, ஆகஸ்ட் 2026 8:55:08 AM (IST)

நெல்லையில் குரூப் 2 தேர்வுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் 24ஆம் தேதி தொடங்குகிறது!
வெள்ளி 21, ஆகஸ்ட் 2026 10:44:13 AM (IST)


