» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
வீடு வீடாக வாக்காளர்களுக்குப் பணப் பட்டுவாடா : திமுக பெண் நிர்வாகியிடம் ரூ.1.38 லட்சம் பறிமுதல்!
செவ்வாய் 21, ஏப்ரல் 2026 4:53:18 PM (IST)
தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களுக்குப் பணப் பட்டுவாடா செய்ததாக திமுக பெண் நிர்வாகி ஒருவரைத் தேர்தல் பறக்கும் படையினர் பிடித்து பணத்தைப் பறிமுதல் செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு காவல் சரகத்திற்கு உட்பட்ட ஆத்திகுளம் ராமலிங்கபுரம் கிராமத்தில், அரசியல் கட்சியினர் வீடு வீடாகச் சென்று வாக்காளர்களுக்குப் பணம் விநியோகிப்பதாகத் தேர்தல் பறக்கும் படையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து, தேர்தல் பறக்கும் படையினர் ஆத்திகுளம் பகுதியில் அதிரடிச் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அங்குள்ள அம்பேத்கர் நகர் பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் நடமாடிக் கொண்டிருந்த பெண் ஒருவரைப் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் ஆத்திகுளம் பகுதியைச் சேர்ந்த மாரியம்மாள் (49) என்பதும், அவர் திமுக ஒன்றிய துணைச் செயலாளராகப் பொறுப்பு வகித்து வருவதும் தெரியவந்தது. அவரிடம் நடத்திய சோதனையில், வாக்காளர்களுக்கு விநியோகிப்பதற்காக வைத்திருந்த ரூ.1,38,500 ரொக்கப் பணத்தைப் பறக்கும் படையினர் கைப்பற்றினர்.
முறையான ஆவணங்களின்றி கொண்டு வரப்பட்ட அந்தப் பணத்தைப் பறிமுதல் செய்த அதிகாரிகள், இது குறித்து கயத்தாறு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், மாரியம்மாளிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தேர்தல் நேரத்தில் ஆளுங்கட்சி நிர்வாகி பணப் பட்டுவாடா புகாரில் பிடிபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கடவுச்சீட்டு, ஓட்டுநர் உரிமம் உட்பட 12 மாற்று ஆவணங்கள் மூலம் வாக்களிக்கலாம்!
புதன் 22, ஏப்ரல் 2026 12:38:00 PM (IST)

வீடுபுகுந்து பேராசிரியையை அரிவாளால் தாக்கி 14 பவுன் நகை கொள்ளை: நெல்லையில் துணிகரம்!
புதன் 22, ஏப்ரல் 2026 8:13:10 AM (IST)

பிரச்சாரம் ஓய்ந்தவுடன் கடைபிடிக்க வேண்டிய முக்கியக் கட்டுப்பாடுகள் மற்றும் தடைகள் அறிவிப்பு
செவ்வாய் 21, ஏப்ரல் 2026 4:34:50 PM (IST)

சட்டமன்ற பொதுத்தேர்தல் மினி மாரத்தான் போட்டி: ஆட்சியர் இரா.சுகுமார், தொடங்கி வைத்தார்
செவ்வாய் 21, ஏப்ரல் 2026 12:55:14 PM (IST)

வாக்காளர்களுக்கு தலா ரூ.1,000 வழங்கப்பட வேண்டும் : அதிமுக வேட்பாளரின் பேச்சால் சர்ச்சை!
திங்கள் 20, ஏப்ரல் 2026 5:51:43 PM (IST)

திருநெல்வேலியில் தேர்தல் விழிப்புணர்வு சதுரங்கப் போட்டி: ஆட்சியர் தொடங்கி வைத்தார்
திங்கள் 20, ஏப்ரல் 2026 5:08:41 PM (IST)


ஏழுமலைApr 22, 2026 - 07:31:18 AM | Posted IP 104.2*****