» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை தேர்தல் திருவிழா : 6 தொகுதிகளில் 92 வேட்பாளர்கள் களம்!
புதன் 22, ஏப்ரல் 2026 8:08:31 AM (IST)
தமிழக சட்டமன்றப் பொதுத்தேர்தல் நாளை (ஏப்ரல் 23) நடைபெறவுள்ள நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்றத் தொகுதிகளிலும் நேற்று மாலை 6 மணியுடன் தேர்தல் பிரச்சாரம் முறைப்படி நிறைவடைந்தது.
கடந்த ஒரு மாத காலமாக வெயிலையும் பொருட்படுத்தாமல் வேட்பாளர்கள் வீதி வீதியாகச் சென்று வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டனர். பிரச்சாரத்தின் கடைசி நாளான நேற்று, அனைத்துக் கட்சிகளும் தங்கள் பலத்தைக் காட்டும் வகையில் பேரணிகள் மற்றும் ரோடு ஷோக்களை நடத்தின. மாலை 6 மணி ஆனவுடன் ஒலிபெருக்கிகள் அணைக்கப்பட்டு, வெளி மாவட்டத்தைச் சேர்ந்த அரசியல் கட்சியினர் தொகுதியை விட்டு வெளியேறினர்.
தொகுதிகள் மற்றும் வேட்பாளர்கள் நிலவரம்:
மாவட்டம் முழுவதும் மொத்தம் 92 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
தூத்துக்குடி: அமைச்சர் கீதா ஜீவன் (திமுக), சி.த. செல்லப்பாண்டியன் (அதிமுக), ஸ்ரீநாத் (த.வெ.க) உட்பட 15 பேர் போட்டி.
கோவில்பட்டி: கடம்பூர் செ. ராஜூ (அதிமுக) மற்றும் கருணாநிதி (திமுக) இடையே நேரடிப் போட்டி நிலவும் நிலையில் மொத்தம் 21 பேர் களம் காண்கின்றனர்.
திருச்செந்தூர்: அனிதா ராதாகிருஷ்ணன் (திமுக) மற்றும் பாஜக வேட்பாளர் கே.ஆர்.எம். ராதாகிருஷ்ணன் உட்பட 13 பேர் போட்டி.
விளாத்திகுளம்: ஜி.வி. மார்க்கண்டேயன் (திமுக) மற்றும் ஆர். சத்யா (அதிமுக) உட்பட 15 பேர் போட்டி.
ஸ்ரீவைகுண்டம்: ஊர்வசி அமிர்தராஜ் (காங்கிரஸ்) மற்றும் எஸ்.பி. சண்முகநாதன் (அதிமுக) உட்பட 15 பேர் போட்டி.
ஓட்டப்பிடாரம்: ராமஜெயம் (திமுக), சுந்தர்ராஜ் (அமமுக) மற்றும் டாக்டர் கிருஷ்ணசாமி (புதிய தமிழகம்) உட்பட 13 பேர் போட்டி.
தீவிர சோதனையில் அதிகாரிகள்:
பிரச்சாரம் ஓய்ந்ததைத் தொடர்ந்து, தொகுதியில் வாக்காளர் அல்லாத வெளிநபர்கள் தங்கியுள்ளனரா என்பதைக் கண்டறிய ஹோட்டல்கள், விடுதிகள் மற்றும் திருமண மண்டபங்களில் தேர்தல் அதிகாரிகள் மற்றும் போலீசார் விடிய விடிய அதிரடி சோதனை நடத்தினர்.
நாளை வாக்குப்பதிவு: நாளை காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்குகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்கத் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் ஆட்சியர் செய்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கடவுச்சீட்டு, ஓட்டுநர் உரிமம் உட்பட 12 மாற்று ஆவணங்கள் மூலம் வாக்களிக்கலாம்!
புதன் 22, ஏப்ரல் 2026 12:38:00 PM (IST)

வீடுபுகுந்து பேராசிரியையை அரிவாளால் தாக்கி 14 பவுன் நகை கொள்ளை: நெல்லையில் துணிகரம்!
புதன் 22, ஏப்ரல் 2026 8:13:10 AM (IST)

பிரச்சாரம் ஓய்ந்தவுடன் கடைபிடிக்க வேண்டிய முக்கியக் கட்டுப்பாடுகள் மற்றும் தடைகள் அறிவிப்பு
செவ்வாய் 21, ஏப்ரல் 2026 4:34:50 PM (IST)

சட்டமன்ற பொதுத்தேர்தல் மினி மாரத்தான் போட்டி: ஆட்சியர் இரா.சுகுமார், தொடங்கி வைத்தார்
செவ்வாய் 21, ஏப்ரல் 2026 12:55:14 PM (IST)

வாக்காளர்களுக்கு தலா ரூ.1,000 வழங்கப்பட வேண்டும் : அதிமுக வேட்பாளரின் பேச்சால் சர்ச்சை!
திங்கள் 20, ஏப்ரல் 2026 5:51:43 PM (IST)

திருநெல்வேலியில் தேர்தல் விழிப்புணர்வு சதுரங்கப் போட்டி: ஆட்சியர் தொடங்கி வைத்தார்
திங்கள் 20, ஏப்ரல் 2026 5:08:41 PM (IST)


MohanrajApr 22, 2026 - 09:39:03 AM | Posted IP 162.1*****