» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: முதியவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை!
செவ்வாய் 26, மே 2026 4:55:57 PM (IST)
ஆடு மேய்க்கச் சென்ற சிறுமியைப் பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில், முதியவருக்கு 10 ஆண்டுகள் கடுமையான சிறை தண்டனை விதித்துத் தென்காசி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள பெருங்கோட்டூர் காலனி பகுதியைச் சேர்ந்த சண்முகையா மகன் முருகன் (62) என்பவர், ஆடு மேய்ப்பதற்காகச் சென்ற சிறுமியைப் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இக்கொடூரச் சம்பவம் குறித்து சிறுமியின் தாயார், சங்கரன்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இப்புகாரின் அடிப்படையில், சட்டம்-ஒழுங்கு பாதுகாப்பு மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு விதிகளின் கீழ், சங்கரன்கோவில் மகளிர் காவல் நிலைய விசாரணை அதிகாரி இன்ஸ்பெக்டர் வேளாங்கண்ணி உதயரேகா உடனடியாகப் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, முருகனை கைது செய்து சிறையில் அடைத்தார்.
இது தொடர்பான குற்றவியல் வழக்கு, தென்காசி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி பி.ராஜவேல் முன்னிலையில் தீவிர விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, சிறுமிக்கு இழைக்கப்பட்ட கொடுமையைக் கண்டித்ததுடன், சாட்சியங்கள் மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில் முருகன் மீதான குற்றம் ஐயமின்றிக் நிரூபிக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, குற்றவாளி முருகனுக்கு 10 ஆண்டுகள் பலத்த சிறை தண்டனையும், ரூ.1,000/- அபராதமும் விதித்து நீதிபதி பி.ராஜவேல் அதிரடியாகத் தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசுத் தரப்பில் வழக்கறிஞர் குட்டி என்ற மருதப்பன் ஆஜராகி வாதாடினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மதுபோதை தகராறில் வெறிச்செயல்: வாலிபரை வெட்டிக்கொன்ற 3 சிறுவர்கள் சிக்கினர்!
செவ்வாய் 25, ஆகஸ்ட் 2026 4:52:09 PM (IST)

மிலாடி நபி: மதுபானக்கடைகள்,பார்களை மூட ஆட்சியர் ஆனந்த் மோகன் உத்தரவு!
செவ்வாய் 25, ஆகஸ்ட் 2026 12:42:41 PM (IST)

மக்களுக்கான த.வெ.க. ஆட்சியில் ஊழலுக்கு இடமில்லை : நெல்லையில் அமைச்சர் ஜெகதீஸ்வரி பேச்சு!
திங்கள் 24, ஆகஸ்ட் 2026 8:51:53 AM (IST)

திருமணம் செய்து கொள்வதாகக் கூறி இளம் பெண்ணை ஏமாற்றிய இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்!
சனி 22, ஆகஸ்ட் 2026 12:33:41 PM (IST)

காவல் நிலையத்தில் வாலிபர் தற்கொலை முயற்சி : தலைமை காவலர் உள்பட 2பேர் சஸ்பெண்ட்!
சனி 22, ஆகஸ்ட் 2026 11:31:58 AM (IST)

திருநெல்வேலியில் செப். 19-ல் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்: ஆட்சியர் தகவல்!
சனி 22, ஆகஸ்ட் 2026 11:09:15 AM (IST)


