» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தூத்துக்குடி மாநகராட்சியில் தெருவிளக்குகள் எரியாமல் அவலம்: திருட்டு, வழிப்பறி பயத்தில் பொதுமக்கள்!

செவ்வாய் 26, மே 2026 7:56:37 PM (IST)



தூத்துக்குடி மாநகராட்சியின் பெரும்பாலான தெருக்களில் மின்விளக்குகள் இல்லாமல் இருளில் மூழ்கிக் கிடப்பதால் சங்கிலிப் பறிப்பு, திருட்டு போன்ற குற்ற சம்பவங்கள் அரங்கேறும் சூழல் நிலவி வருவதாகப் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். 

தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில், கடந்த சில வாரங்களாகத் தெருவிளக்குகள் எரியாமல் முற்றிலும் முடங்கியுள்ளன. மாலை 6 மணி முதலே ஒட்டுமொத்தத் தெருக்களும் கும்மிருட்டில் மூழ்கிவிடுவதால், வேலை முடிந்து நள்ளிரவில் வீடு திரும்பும் தொழிலாளர்கள், பெண்கள் மற்றும் முதியவர்கள் வீட்டை விட்டு வெளியே சாலைகளில் நடமாடக் கூட முடியாத பாதுகாப்பு அற்ற நிலை நீடித்து வருகிறது.

தெருக்களில் விளக்குகள் எரியாமல் இருட்டாக இருப்பதைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு, மர்ம நபர்கள் செயின் பறிப்பு, திருட்டு போன்ற சமூக விரோத செயல்களில் ஈடுபட வாய்ப்புள்ளது. மேலும், தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 4-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளது.  

மாலை நேரங்களில் மாணவ, மாணவிகள் இருண்ட தெருக்கள் வழியாகச் சென்று வர நேரிடும் போது, ஏதேனும் அசம்பாவிதங்களோ அல்லது தெருநாய்களின் கடி உள்ளிட்ட விபத்துகளோ ஏற்படும் அபாயம் மிக அதிகமாக உள்ளது. எனவே, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் மற்றும் மாநகராட்சி ஆணையர் ஆகியோர் உடனடியாக இவ்விஷயத்தில் தலையிட்டு மாநகராட்சியின் அனைத்து வார்டுகளிலும் பழுதடைந்துள்ள பழைய எல்இடி தெருவிளக்குகளைப் போர்க்கால அடிப்படையில் முழுமையாக அகற்றிவிட்டுப் புதிய விளக்குகளைப் பொருத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


மக்கள் கருத்து

அதுமே 27, 2026 - 04:32:56 PM | Posted IP 104.2*****

மாநகராட்சி துட்டு பயலுகள் தான் காரணம்

Indianமே 27, 2026 - 11:31:44 AM | Posted IP 172.7*****

Please complaint to MLA Mr.Sreenath.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory