» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
குடிநீர், தெருவிளக்கு புகார்களுக்குப் புதிய டோல் ஃப்ரீ எண் அறிமுகம்: மாநகராட்சி ஆணையர் தகவல்!
செவ்வாய் 26, மே 2026 8:35:19 PM (IST)
தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் குடிநீர், தெருவிளக்கு குறித்து பொதுமக்கள் புகார்களைப் பதிவு செய்ய 1800 203 0401 என்ற புதிய 'டோல் ஃப்ரீ' எண் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து மாநகராட்சி ஆணையர் சி.பிரியங்கா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் "தூத்துக்குடி மாநகராட்சி 60-வார்டுகளிலும் பொதுமக்களுக்குத் தேவையான அனைத்து அடிப்படை கட்டமைப்பு வசதிகளும் தங்கு தடையின்றிப் போர்க்கால அடிப்படையில் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. இருப்பினும், இச்சேவைகளில் ஏதேனும் குறைபாடுகள் அல்லது பராமரிப்புப் பிரச்சினைகள் இருப்பது கண்டறியப்பட்டால், பொதுமக்கள் தங்கள் வார்டு கவுன்சிலர்கள் அல்லது அலுவலகங்களைத் தேடி அலைவதைத் தவிர்க்கும் பொருட்டுப் புதிய தொலைபேசி உருவாக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்களின் புகார்களைப் பதிவு செய்ய 1800 203 0401 என்ற பிரத்தியேகக் கட்டணமில்லாத் தொலைபேசி வசதி மாநகராட்சி அலுவலகத்தில் செயல்பாட்டிற்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.
மாநகராட்சிப் பகுதிகளில் குடிநீர்ப் பற்றாக்குறை, தெருவிளக்குகள் எரியாத அவலம் அல்லது சாக்கடைத் தேக்கம் போன்ற எவ்விதப் பிரச்சினைகள் இருந்தாலும், பொதுமக்கள் உடனடியாக மேற்படி டோல் ஃப்ரீ எண்ணைத் தொடர்பு கொண்டு தங்களது உத்தியோகப்பூர்வப் புகார்களைப் பதிவு செய்து விரைவான தீர்வினைப் பெற்றுப் பயன்பெறலாம் என மாநகராட்சி ஆணையர் சி.பிரியங்கா தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: முதியவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை!
செவ்வாய் 26, மே 2026 4:55:57 PM (IST)

சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளர் பணியிடங்கள்: பெண்கள் விண்ணபிக்கலாம் - ஆட்சியர் தகவல்!
செவ்வாய் 26, மே 2026 3:53:11 PM (IST)

விடுதி தோழிகளை செல்போனில் ஆபாச வீடியோ எடுத்து காதலனுக்கு அனுப்பிய பெண் கைது!
செவ்வாய் 26, மே 2026 9:12:05 AM (IST)

முதலமைச்சர் விஜய் குறித்து ஆபாசப் பேச்சு: வீடியோ வெளியிட்ட மென்பொருள் பொறியாளர் கைது!
செவ்வாய் 26, மே 2026 9:04:35 AM (IST)

தென்காசியில் அமைச்சர் டி.கே.பிரபு திடீர் ஆய்வு: 18 கற்குவாரிகளை மூட அதிரடி உத்தரவு!
திங்கள் 25, மே 2026 5:37:59 PM (IST)

இந்தியாவில் முதன்முறையாக டிஜிட்டல் சென்சஸ் : நெல்லையில் பயிற்சி தொடக்கம்!
திங்கள் 25, மே 2026 12:54:24 PM (IST)



Babuமே 27, 2026 - 09:10:05 AM | Posted IP 104.2*****