» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தூத்துக்குடியில் ஒரே நேரத்தில் 2 கேட்களையும் மூடுவதால் போக்குவரத்து பாதிப்பு: ரயில்வேக்கு கண்டனம்

செவ்வாய் 14, ஜூலை 2026 12:04:50 PM (IST)

RailwayGatetuty.jpg

தூத்துக்குடி மாநகரில் இரண்டு ரயில்வே கேட்களையும் ஒரே நேரத்தில் மூடுவதால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் கண்டித்து மக்கள் நல கூட்டமைப்பினர் துண்டுப் பிரசுரங்களை விநியோகம் செய்துள்ளனர்.

தூத்துக்குடி முதல் கேட் மற்றும் இரண்டாம் கேட் ஆகிய இரண்டு ரயில்வே கேட்களும் ஒரே நேரத்தில் மூடப்படுகின்றன. பொதுமக்கள் மணிநேரக் கணக்கில் சாலைகளில் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்லும் மாணவர்கள் மற்றும் வேலைக்குச் செல்லும் தொழிலாளர்கள் உரிய நேரத்திற்குச் செல்ல முடியாமல் காலதாமதம் ஆகிறது.

ஆம்புலன்ஸ் உள்ளிட்ட உயிர்காக்கும் அவசரச் சிகிச்சை வாகனங்கள் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிக்கின்றன. நகரின் முக்கியப் பிரதான சாலைகளில் தேவையற்ற போக்குவரத்து நெரிசல்கள் தினமும் ஏற்படுகின்றன. இரண்டு ரயில்வே கேட்களுக்கும் ஒரே சிக்னல் இணைப்பாக இருப்பதை மாற்றி, உடனடியாகத் தனித்தனி சிக்னல் அமைப்பை ரயில்வே நிர்வாகம் ஏற்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். 

மேலும், இக்கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றத் தவறினால், தூத்துக்குடி மக்களைத் திரட்டி மிக விரைவில் மக்கள் போராட்டம் நடத்தப்படும் என்றும், அதனால் ஏற்படும் விளைவுகளுக்கு ரயில்வே நிர்வாகமே பொறுப்பேற்க வேண்டும் என்றும் துண்டுப் பிரசுரம் வழியாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து

RamarJul 15, 2026 - 08:20:17 PM | Posted IP 172.7*****

தயவுசெய்து ரயில் நிலையம் ஊருக்கு வெளிய கொண்டு போங்க முடியல சாமி 🤦

ANNA ARUN SUBRAMANIANJul 15, 2026 - 07:44:28 PM | Posted IP 172.7*****

Change the railway station to melavitan then only traffic will reduce in Tuticorin city

BabuDec 29, 1784 - 01:30:00 AM | Posted IP 172.7*****

chennai pottiya kilakum merkum summa otuvanuugale atha kandichum porattam panunga

SUNDAROct 23, 1784 - 04:30:00 AM | Posted IP 104.2*****

paalam viraivaka kattavum.

KARNARAJ RAMANATHANJul 14, 2026 - 01:37:21 PM | Posted IP 162.1*****

USELESS PROTEST. FIGHT TO SHIFT RAILWAY STATION TO MEELAVITTAN FOR COMPLETE SOLUTION AND MORE TRAIN OPPORTUNITIES FOR THOTHUKUD

தமிழன்Jul 14, 2026 - 01:30:58 PM | Posted IP 104.2*****

இரண்டாம் கேட் திறந்து இருக்கும் நேரத்தை விட மூடி இருக்கும் நேரம்தான் அதிகமாக உள்ளது. ஒருநாளைக்கு குறைந்தது முப்பது முறை மூடப்படுகிறது. தூத்துக்குடி மக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். ரெயில்வே நிர்வாகம் புத்திசாலித்தனமாக சிந்தித்து நல்ல முடிவை எடுத்து தூத்துக்குடி மக்களை இந்த போக்குவரத்து நெரிசலில் இருந்து காப்பாற்ற வேண்டும்.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory