» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தவெக எம்.எல்.ஏ-க்கள் மீது முதல்வருக்கு நம்பிக்கை இல்லை : அனிதா ராதாகிருஷ்ணன் பேட்டி!

புதன் 15, ஜூலை 2026 10:31:38 AM (IST)

anithatutypress.jpg

தவெக எம்.எல்.ஏ-க்கள் மீது முதல்வருக்கு நம்பிக்கை இல்லை என்றும், எம்.எல்.ஏ-க்களின் அதிருப்தியால் இந்த ஆட்சி விரைவில் கவிழும் என்றும் திருச்செந்தூர் எம்.எல்.ஏ அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடியில் காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின் அனிதா ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், தவெக அரசு மக்களைப் பற்றிக் கவலைப்படாமல் செயல்படுகிறது. 

குறிப்பாக, மேகதாது பிரச்சனையால் டெல்டா பகுதி மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பிரதமரை அணுகித் தண்ணீர் பெறுவதற்கான ஏற்பாடுகளைச் செய்யாமல் அரசு குழப்பத்தை ஏற்படுத்துகிறது. ஆட்சி நிர்வாகத்தை மேற்கொள்ளாமல், மக்களை ஏமாற்றுவதற்கான வழிகளை மட்டுமே அரசு தேடுவதால், இந்த முதல்வர் தேவையா என டெல்டா மக்கள் கேட்கும் நிலை உருவாகியுள்ளது. 

தவெக எம்.எல்.ஏ-க்கள் மீது முதல்வருக்கே நம்பிக்கை இல்லை. எம்.எல்.ஏ-க்கள் வேறு எங்குமாவது சென்று விடுவார்கள் என்ற பயம் அரசிடம் உள்ளது. இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொண்டால் அவர்கள் செல்ல மாட்டார்கள் என்ற எண்ணத்தில் கைது நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும், விரைவில் தவெக எம்.எல்.ஏ-க்கள் அனைவரும் ஒன்றிணைந்து எழுவார்கள் என்றும், அதன் மூலம் இந்த ஆட்சி கவிழும் என்றும் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.


மக்கள் கருத்து

படித்தவன்Dec 26, 1784 - 06:30:00 AM | Posted IP 172.7*****

எவண்டா இந்த ரவுடி பயலை MLA ஆக்கி தேர்ந்தெடுத்தது?

கந்தசாமிJul 15, 2026 - 12:36:32 PM | Posted IP 172.7*****

பாவம் பைத்தியம் முத்தி விட்டது பன்றிக்கு விலங்கு போடவேண்டியதுதான்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory