» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
கன்னியாகுமரியில் காமராஜர் 124-ஆவது பிறந்தநாள் விழா: அமைச்சர் செ.ராஜேஷ் குமார் மரியாதை!
புதன் 15, ஜூலை 2026 4:30:22 PM (IST)

பெருந்தலைவர் காமராஜரின் 124-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, கன்னியாகுமரி கடற்கரையில் அமைந்துள்ள காமராஜர் மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்குத் தமிழ்நாடு அரசின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
கன்னியாகுமரி மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள மணிமண்டபத்தில் நடைபெற்ற இவ்விழாவிற்கு, மாவட்ட ஆட்சித்தலைவர் மு.பிரதாப் தலைமை தாங்கினார். சுற்றுலாத்துறை அமைச்சர் செ.ராஜேஷ் குமார் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார். கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் என்.தளவாய் சுந்தரம், நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆஸ்டின் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்ச்சியில் உதவி ஆட்சியர் (பயிற்சி) ர.மோனிகா, மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பா.ஜாண் ஜெகத் பிரைட், மாவட்ட சுற்றுலா அலுவலர் காமராஜ், கன்னியாகுமரி நகர்மன்ற தலைவர் குமரி ஸ்டீபன், கன்னியாகுமரி நகராட்சி ஆணையர் பட்டுசாமி, அகஸ்தீஸ்வரம் வட்டாட்சியர் ஆறுமுகம், மாதவன், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
பின் செய்தியாளர்களிடம் பேசிய சுற்றுலாத்துறை அமைச்சர் செ.ராஜேஷ் குமார், காமராஜர் 1903 ஜூலை 15 அன்று விருதுநகரில் பிறந்தார் என்றும், 1956-இல் மதிய உணவுத் திட்டத்தையும், 1960-இல் 11-ஆம் வகுப்பு வரை இலவசக் கல்வித் திட்டத்தையும் அறிமுகப்படுத்தியவர் என்றும் குறிப்பிட்டார். மேலும், கன்னியாகுமரி மாவட்ட வறட்சியைத் தீர்ப்பதற்காகத் தெற்கு ஆசியாவிலேயே மிக உயரமான மாத்தூர் தொட்டிப்பாலத்தைக் கட்டியவர் காமராஜர் எனத் தெரிவித்தார்.
1975 அக்டோபர் 2 அன்று காமராஜர் மறைந்தாலும் மக்கள் நெஞ்சில் நிலைத்திருப்பவர் என்றும், அவரைப் பெருமைப்படுத்தும் வகையில் தமிழ்நாடு அரசின் சார்பில் 2000 அக்டோபர் 2 அன்று இந்த மணிமண்டபம் திறந்து வைக்கப்பட்டது என்றும் கூறினார். மார்பளவு சிலையும், பகுதி நேர நூலகமும் கொண்டுள்ள இம்மணிமண்டபத்தில் ஆண்டுதோறும் காமராஜர் பிறந்தநாள் அரசு விழாவாகக் கொண்டாடப்பட்டு வருவதாக அமைச்சர் தெரிவித்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

உயர்நீதிமன்ற உத்தரவு எதிரொலி: தாமிரபரணியை பாதுகாக்க ஆலோசனை - ஆட்சியர் அழைப்பு!
செவ்வாய் 14, ஜூலை 2026 4:38:54 PM (IST)

நெல்லையில் 17ஆம் தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: ஆட்சியர் ஆனந்த் மோகன் அறிவிப்பு
செவ்வாய் 14, ஜூலை 2026 11:18:16 AM (IST)

உலக மக்கள் தொகை தினம் விழிப்புணர்வு பேரணி: ஆட்சியர் ஆனந்த் மோகன் துவக்கி வைத்தார்!
திங்கள் 13, ஜூலை 2026 12:43:35 PM (IST)

நெல்லையப்பர் கோவில் ஆடிப் பூரத் திருவிழா: காந்திமதி அம்பாளுக்கு வளைகாப்பு வைபவம்!
திங்கள் 13, ஜூலை 2026 8:44:13 AM (IST)

குற்றாலத்திலிருந்து பாபநாசம் சென்றபோது விபத்து: சுற்றுலா பயணி பரிதாப பலி; 10 பேர் படுகாயம்!
ஞாயிறு 12, ஜூலை 2026 11:48:25 AM (IST)

போலி ஆவணம் தயாரித்து விமானப்படை அதிகாரி நிலம் மோசடி: தம்பதி உட்பட 3 பேர் கைது!
ஞாயிறு 12, ஜூலை 2026 11:38:10 AM (IST)


