» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
பொதுவெளியில் மது அருந்துவதைத் தட்டிய கேட்ட நபர் மீது தாக்குதல்: 3 பேர் கைது!
திங்கள் 24, ஆகஸ்ட் 2026 7:56:10 PM (IST)
குரும்பூர் அருகே பொதுவெளியில் மது அருந்துவதைத் தட்டி கேட்ட மர அறுவை தொழிலாளியைக் கல்லால் தாக்கிய 3 பேரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், குரும்பூர் அருகே உள்ள வடக்கு மரந்தலையைச் சேர்ந்தவர் மர அறுவை தொழிலாளி குணசீலன் (51). கடந்த சில நாட்களுக்கு முன்பு உவரியைச் சேர்ந்த மீனவர்களான சார்லஸ் (48), அன்பழகன் (38) மற்றும் தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி பூப்பாண்டியாபுரத்தைச் சேர்ந்த முத்துசாமி மகன் மணிகண்டன் (45) ஆகிய 3 பேரும் வடக்கு மரந்தலையில் உள்ள அம்மன் கோவில் அருகே மது அருந்திக் கொண்டிருந்தனர்.
அங்கு வந்த குணசீலன், பொதுவெளியில் மது அருந்தக்கூடாது எனக் கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த 3 பேரும் குணசீலனுடன் தகராறில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கிருந்தவர்கள் அவர்களைச் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் குணசீலன் மீண்டும் அம்மன் கோவில் அருகே நின்றிருந்தபோது, அங்கு வந்த சார்லஸ், அன்பழகன் மற்றும் மணிகண்டன் ஆகியோர் அவருடன் மீண்டும் தகராறு செய்து, கல்லால் கடுமையாகத் தாக்கினர்.
குணசீலனின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த தனசேகர் என்பவர் அவர்களைச் சத்தமிட்டுக் தடுத்துள்ளார். இதையடுத்து 3 பேரும் குணசீலனுக்குக் கொலை மிரட்டல் விடுத்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். இதுகுறித்து குணசீலன் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த குரும்பூர் காவல்துறையினர், சார்லஸ், அன்பழகன், மணிகண்டன் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். பின்னர் அவர்களை ஸ்ரீவைகுண்டம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மக்களுக்கான த.வெ.க. ஆட்சியில் ஊழலுக்கு இடமில்லை : நெல்லையில் அமைச்சர் ஜெகதீஸ்வரி பேச்சு!
திங்கள் 24, ஆகஸ்ட் 2026 8:51:53 AM (IST)

திருமணம் செய்து கொள்வதாகக் கூறி இளம் பெண்ணை ஏமாற்றிய இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்!
சனி 22, ஆகஸ்ட் 2026 12:33:41 PM (IST)

காவல் நிலையத்தில் வாலிபர் தற்கொலை முயற்சி : தலைமை காவலர் உள்பட 2பேர் சஸ்பெண்ட்!
சனி 22, ஆகஸ்ட் 2026 11:31:58 AM (IST)

திருநெல்வேலியில் செப். 19-ல் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்: ஆட்சியர் தகவல்!
சனி 22, ஆகஸ்ட் 2026 11:09:15 AM (IST)

ஓடும் பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை: வழக்கறிஞர் அதிரடி கைது!
சனி 22, ஆகஸ்ட் 2026 8:55:08 AM (IST)

நெல்லையில் குரூப் 2 தேர்வுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் 24ஆம் தேதி தொடங்குகிறது!
வெள்ளி 21, ஆகஸ்ட் 2026 10:44:13 AM (IST)


