» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கடனை திருப்பி தராததால் நண்பர் அடித்துக் கொலை : தூத்துக்குடி வாலிபர் கைது!

செவ்வாய் 19, மார்ச் 2024 3:06:42 PM (IST)

சுங்கான் கடையில் ரூ.200 கடனுக்காக நண்பரை அடித்துக் காென்ற சாத்தான்குளத்தை சேர்ந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். 

விருதுநகரைச் சேர்ந்த மாரிமுத்து (33) என்பவர் நாகர்கோவில் சுங்கான் கடையில் உள்ள ஒரு கடையில் வேலை பார்த்து வந்தார். அவர் அங்கேயே தங்கி வேலை பார்த்து வந்தார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு மாரிமுத்து திடீரென மயங்கி விழுந்துள்ளார். அவரை சக தொழிலாளர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி மாரிமுத்து பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து ஆசாரிபள்ளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அவர் மது குடித்ததில் கீழே விழுந்ததாகவும் அதனால் தான் இறந்திருக்கலாம் என்றும் கூறப்பட்டது. அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் திடீர் திருப்பமாக மாரிமுத்து உடலில் காயங்கள் இருப்பதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. 

இதனால் தாக்குதலில் தான் அவர் இறந்திருக்கலாம் என போலீசார் கருதினர். அதன்அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டது. இதில் மாரிமுத்துவுடன் வேலை பார்த்த சாத்தான்குளத்தை சேர்ந்த சாலமோன் என்பவர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரிடம் விசாரணை நடத்தியபோது, முன்னுக்குப்பின் முரணாக பேசிய அவர், பின்னர் தான் தாக்கியதில் தான் மாரிமுத்து கீழே விழுந்ததாக தெரிவித்தார். 

இதனை தொடர்ந்து போலீசார் சாலமோனை கைது செய்தனர். பின்னர் அவர் போலீசாரிடம் கூறியதாவது: நானும் மாரிமுத்துவும் மது அருந்தியபோது அவர் என்னிடம் ரூ.200 கடன் வாங்கினார். நீண்ட நாட்களாகியும் அதனை அவர் திருப்பித் தரவில்லை. இது எனக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. சம்பவத்தன்று மது அருந்தும் போதும் கடனை கேட்டேன்.

 இதுதொடர்பாக இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த நான், மாரி முத்துவை கீழே தள்ளிவிட்டேன். இதில் அவர் காயம் அடைந்தார். பின்னர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இறந்து விட்டார்.இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார். இதனை தொடர்ந்து போலீசார் சாலமோனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நாகர்கோவில் சிறையில் அடைத்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory