» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மக்களவை தேர்தல்: அதிமுக முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் இபிஎஸ்!

புதன் 20, மார்ச் 2024 10:35:11 AM (IST)

மக்களவை தேர்தல் 2024-க்கான முதற்கட்டமாக 16 வேட்பாளர்கள் பட்டியலை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். 

பின்னர் செய்தியாளர்கள் கேள்விகளுக்குப் பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, "மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணி அபார வெற்றி பெறும். அதிமுகவுக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு கூடியுள்ளது. அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு ஐந்து இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. புதிய தமிழகம் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. மக்களவைத் தேர்தல் அறிக்கையை விரைவில் எதிர்பார்க்கலாம்” என்றார்.

அதிமுக வேட்பாளர் பட்டியல்:

சென்னை வடக்கு - ராயபுரம் மனோ

சென்னை தெற்கு - ஜெயவர்தன்

காஞ்சிபுரம் (தனி) - ராஜசேகர்

அரக்கோணம் - ஏ.எல்.விஜயன்

கிருஷ்ணகிரி - வி.ஜெயப்பிரகாஷ்

ஆரணி - ஜி.வி.கஜேந்திரன்

சேலம் - விக்னேஷ்

தேனி - நாராயணசாமி

விழுப்புரம் (தனி)- ஜெ.பாக்யராஜ்

நாமக்கல் - எஸ்.தனிமொழி

ஈரோடு: ஆற்றல் அசோக்குமார்’

கரூர்: கே.ஆர்.எல்.தங்கவேல்

சிதம்பரம் (தனி): சந்திரகாசன்

நாகப்பட்டினம் (தனி)- சுர்சுத் சங்கர்

மதுரை: பி.சரவணன்

ராமநாதபுரம்: பா.ஜெயபெருமாள்


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory