» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தி.மு.க. தேர்தல் அறிக்கை: முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்!

புதன் 20, மார்ச் 2024 10:40:33 AM (IST)

தி.மு.க. தேர்தல் அறிக்கையை திமுக தலைவர் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.

தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில் அரசியல் கட்சிகள் வேட்பாளர், தொகுதி பங்கீடு, தேர்தல் அறிக்கை வெளியிடுவதில் மும்முரம் காட்டி வருகின்றன. அந்த வகையில் தி.மு.க. இன்று தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தல் அறிக்கை தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. தலைமையிலான குழு வடிவமைத்துள்ளது. 

இந்த தேர்தல் அறிக்கையை நேற்று தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலினிடம் தேர்தல் அறிக்கை வடிவமைப்பு குழு தலைவி கனிமொழி ஒப்படைத்தார். இந்நிலையில், தேர்தல் அறிக்கையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டார். அதில், மாநிலங்கள் சுயாட்சி பெற அரசியலமைப்பு சட்டம் திருத்தப்படும். சென்னையில்  உச்சநீதிமன்றத்தின் கிளை அமைக்கப்படும் என பல்வேறு வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளன. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory