» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

முட்டம் கடலில் இறந்த நிலையில் மிதந்த கடல் ஆமை : வனத்துறை விசாரனை

வெள்ளி 29, மார்ச் 2024 5:16:36 PM (IST)



கன்னியாகுமரி மாவட்டம் நேற்று முட்டம் மீன் பிடித்துறைமுக கடல் பகுதியில் கடல் ஆமை ஒன்று இறந்த நிலையில் மிதந்து வந்தது. இதை பார்த்த மீனவர்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தார். உடனே வேளிமலை வனச்சரகர் ராஜேந்திரன் மற்றும் வனவர் அஜுத்குமார் ஆகியோர் விரைந்து சென்று சம்பவ இடத்தை பார்வையிட்டனர். பின்னர் இறந்து மிதந்த கடலாமையை மீட்டு கரை சேர்த்தனர். 

இதையடுத்து மணவாளக்குறிச்சி கால்நடை மருத்துர் பவித்ரா கடல் ஆமையை பிரேத பரிசோதனை நடத்தினார். பிரேத பரிசோதனைக்கு பின்பு கடல் ஆமை அப்பகுதியில் ஆழ் குழி தோண்டி புதைக்கப்பட்டது. உடற்கூறு ஆய்வறிக்கை வந்த பின்னரே கடலாமை இறந்தது எப்படி? என தெரிய வரும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory