» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
மிலாடி நபியை முன்னிட்டு செப். 17 பொது விடுமுறை : தமிழக அரசு அறிவிப்பு!
திங்கள் 9, செப்டம்பர் 2024 5:24:56 PM (IST)
மிலாடி நபியை முன்னிட்டு செப்டம்பர் 17ஆம் தேதி பொது விடுமுறை அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
செப்டம்பர் 16-ஆம் தேதி மிலாடி நபி கொண்டாடப்படுவதாக இருந்த நிலையில், அன்றைய தினம் பொது விடுமுறை அளித்து தமிழக அரசு ஏற்கெனவே அரசாணை வெளியிட்டிருந்தது. இந்த நிலையில், செப். 4-ஆம் தேதி எதிர்பார்க்கப்பட்ட பிறை தெரியாததால், செப்டம்பர் 17-ஆம் தேதி மிலாடி நபி கொண்டாடப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.இதனைத் தொடர்ந்து, தமிழக அரசிடம் தலைமை காஜி கேட்டுக் கொண்டதன் அடிப்படையில், தமிழக அரசு அலுவலகங்களுக்கு செப். 17ஆம் தேதி பொது விடுமுறை அளிப்பதாக தலைமைச் செயலாளர் என்.முருகானந்தம் அரசாணையில் குறிப்பிட்டுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி - நாசரேத் திருமண்டல நிர்வாகி நீதிபதி ஜோதிமணி பவளவிழா: மேலாளர் வாழ்த்து!
ஞாயிறு 18, ஜனவரி 2026 12:01:41 PM (IST)

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இன்று கடைசி நாள்: அடுத்த மாதம் 17-ஆம் தேதி இறுதி பட்டியல்!!
ஞாயிறு 18, ஜனவரி 2026 9:34:05 AM (IST)

கல்லால் தாக்கி வங்கி ஊழியர் உள்பட 2 பேர் கொடூரக் கொலை: கஞ்சா போதை ஆசாமிகள் வெறிச்செயல்
ஞாயிறு 18, ஜனவரி 2026 9:26:09 AM (IST)

ஜனநாயகன் படம் வெற்றிகரமாக வெளிவரும்: ஜீவா பேட்டி
ஞாயிறு 18, ஜனவரி 2026 9:03:49 AM (IST)

திரேஸ்புரம் நாட்டுப்படகு மீன்பிடித் துறைமுகத்தில் மீன்கள் விலை உயா்வு: கூட்டம் அலைமோதல்!
ஞாயிறு 18, ஜனவரி 2026 8:25:24 AM (IST)
_1768652448.jpg)
ஆண்களுக்கு இலவச பஸ் பயணம் யாராவது கேட்டார்களா? சீமான் விமர்சனம்!
சனி 17, ஜனவரி 2026 5:51:10 PM (IST)

