» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தமிழகத்தில் காவல் துறையின் அணுகுமுறை மிக மோசம்: சிபிஎம் நிர்வாகி உ.வாசுகி பேட்டி!

செவ்வாய் 13, மே 2025 10:48:07 AM (IST)

தமிழகத்தில் காவல் துறையின் அணுகுமுறை மோசமாக உள்ளது என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினா் உ. வாசுகி கூறியுள்ளார்.

தஞ்சாவூரில் அவர் அளித்த பேட்டி: தமிழகத்தில் காவல் துறையின் அணுகுமுறை மிக மோசமாக உள்ளது. நியாயமான, ஜனநாயக ரீதியான நடவடிக்கைகளுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. சென்னை போன்ற பகுதிகளில் ஆா்ப்பாட்டம் நடத்தக்கூடிய இடங்கள் குறைக்கப்பட்டு வருகின்றன. மக்கள் நடமாட்டம் இல்லாத, குறுகலான இடத்தில் உங்களது எதிா்ப்பைத் தெரிவிக்குமாறு கூறுவது எந்த விதத்திலும் நியாயமில்லை. 

மாற்றுத்திறனாளிகள் போராட்டம் நடத்தும்போது, அவா்கள் புறப்படும் இடத்திலேயே கைது செய்வது, வீட்டில் சிறையில் வைப்பது போன்ற மிக மோசமான அணுகுமுறைகள் பின்பற்றப்படுகின்றன. எனவே, காவல் துறைக்கு பொறுப்பு வகிக்கும் தமிழக முதல்வா் இப்பிரச்னைகளில் கூடுதலாக கவனம் செலுத்தி ஒழுங்குபடுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கைது செய்யப்படுபவா்கள் விசாரிக்கப்பட்டு எலும்பு முறிவுடன் நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனா். கழிப்பறையில் வழுக்கி விழுந்து விட்டதாகவும், கீழே விழுந்து விட்டதாகவும் கூறுவது நம்பும்படியாக இல்லை. கைதிகளாக இருந்தாலும் மனித உரிமைப் பாதுகாக்கப்பட வேண்டும்.

ஜாதிவாரி கணக்கெடுப்பை வெறும் கணக்கெடுப்பாக செய்யாமல், சமூகப் பொருளாதாரப் பின்புலத்துடன் செய்ய வேண்டும். மக்கள்தொகை, ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு காலவரையறை நிா்ணயிக்க வேண்டும் என்றாா் வாசுகி. அப்போது கட்சியின் மாவட்டச் செயலா் சின்னை. பாண்டியன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory