» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் 9 பேரும் குற்றவாளிகள்: நீதிமன்றம் தீர்ப்பு
செவ்வாய் 13, மே 2025 11:03:28 AM (IST)

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட 9 பேரும் குற்றவாளிகள் என கோவை மகளிா் நீதிமன்றம் தீா்ப்பு அளித்துள்ளது.
கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் கடந்த 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற பாலியல் வன்கொடுமை வழக்கு தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கில், கல்லூரி மாணவி மற்றும் பெண்கள் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்படுத்தப்பட்டு, துன்புறுத்தப்பட்ட விடியோக்கள் வெளியாகி அதிா்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த வழக்கு பொள்ளாச்சி கிழக்கு போலீஸாரால் விசாரிக்கப்பட்டு பின்னா், சிபிசிஐடிக்கும் அதன்பின் சிபிஐக்கும் மாற்றப்பட்டது. சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், வசந்தகுமாா், மணிவண்ணன், ஹெரன்பால், பாபு, அருளானந்தம், அருண்குமாா் ஆகிய 9 பேரைக் கைது செய்து சிறையில் அடைத்தனா். இவா்கள் மீது கோவை மகளிா் நீதிமன்றத்தில் கடந்த 2019 மே 21-ஆம் தேதி சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
பின்னா், நீதிபதி நந்தினிதேவி முன்னிலையில் கடந்த 2023 பிப்ரவரி 24-ஆம் தேதி சாட்சி விசாரணை தொடங்கியது. இதில், அறைக்கதவுகள் மூடப்பட்டு, ஆன்லைன் மூலமாக சாட்சியம் பெறப்பட்டது. குற்றஞ்சாட்டப்பட்டவா்கள் காணொலி வாயிலாக ஆஜா்படுத்தப்பட்டு வந்தனா். இந்த வழக்கில் சாட்சி விசாரணை, அரசு மற்றும் எதிா்தரப்பு இறுதி வாதம் நிறைவடைந்தது. இதையடுத்து, வழக்கின் தீா்ப்பு மே 13-ஆம் தேதி வழங்கப்படும் என்று நீதிபதி நந்தினிதேவி அறிவித்தாா்.
குற்றஞ்சாட்டப்பட்டவா்கள் அனைவரையும் மகளிா் நீதிமன்றத்தில் போலீஸாா் இன்று காலை ஆஜர்படுத்தியிருந்தனர். இவ்வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட 9 பேரும் குற்றவாளிகள் என நீதிமன்றம் இன்று பரபரப்புத் தீர்ப்பளித்துள்ளது. இன்று பகல் 12 மணிக்கு, குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வழக்கின் தீா்ப்பையொட்டி கோவை நீதிமன்றத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பொள்ளாச்சி வழக்கில் தீர்ப்பு நீதிக்குக் கிடைத்த வெற்றி: பிரேமலதா விஜயகாந்த் வரவேற்பு
செவ்வாய் 13, மே 2025 4:04:08 PM (IST)

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை!
செவ்வாய் 13, மே 2025 3:58:04 PM (IST)

பாஜக சார்பில் ஆபரேஷன் சிந்தூர் வெற்றி பேரணி : நயினார் நாகேந்திரன் அறிவிப்பு
செவ்வாய் 13, மே 2025 12:41:47 PM (IST)

சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியீடு: சென்னை மண்டலத்தில் 97.39 சதவீதம் தேர்ச்சி!
செவ்வாய் 13, மே 2025 12:28:32 PM (IST)

பொது சுகாதாரதுறை திட்ட கட்டிட பணிகள்: குமரி மாவட்டத்திற்கு ரூ.10.25 கோடி நிதி ஒதுக்கீடு!
செவ்வாய் 13, மே 2025 12:02:15 PM (IST)

தமிழகத்தில் காவல் துறையின் அணுகுமுறை மிக மோசம்: சிபிஎம் நிர்வாகி உ.வாசுகி பேட்டி!
செவ்வாய் 13, மே 2025 10:48:07 AM (IST)

முட்டாள் திராவிடம்மே 13, 2025 - 11:32:51 AM | Posted IP 172.7*****