» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பொது சுகாதாரதுறை திட்ட கட்டிட பணிகள்: குமரி மாவட்டத்திற்கு ரூ.10.25 கோடி நிதி ஒதுக்கீடு!

செவ்வாய் 13, மே 2025 12:02:15 PM (IST)

குமரி மாவட்டத்திற்கு 15 வது நிதி குழு மூலம் பொது சுகாதார துறைக்கு புதிய கட்டிட பணிகளுக்கு ரூ.10 கோடியே 25 இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதில் இரண்டு புதிய ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடங்களுக்கு தலா ரூ.150 இலட்சம் நிதி வழங்கி தோவாளை வட்டாரத்திற்குட்பட்;ட அருமநல்லூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கும், கிள்ளியூர் வட்டாரத்திற்குட்பட்ட உண்ணாமலைகடை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேலும் கொல்லங்கோடு, அழகப்பபுரம், பளுகல், ஓலவிளை ஆகிய 4 ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு புதிதாக கூடுதல் கட்டிடத்திற்கு ரூ.75 இலட்சம் வீதம் ஒதுக்கீடு செய்யப்பட்டு புதிய கட்டிடம் கட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. செம்மன்காலை, வில்லுக்குறி -1, அம்பாலகடை, அண்டூர், மாத்தூர் ஆகிய 5 துணை சுகாதார நிலையங்களுக்கு புதிய துணை சுகாதார நிலைய கட்டிடம் கட்ட ரூ.45 இலட்சம் வீதம் நிதி ஒதுக்கீடு செய்யபட்டு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து பைங்குளம், தேவிகோடு, புத்தன்துறை (கிள்ளியூர்), கீழகிருஷ்ணன்புதூர் ஆகிய 4 துணை சுகாதார நிலையங்களுக்கு புதிய துணை சுகாதார நிலைய கட்டிடபணி தொடங்குவதற்கு தலா ரூ.50 இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்யபட்டு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. புதிய கட்டிட பணிகள் சம்மந்தப்பட்ட ஊராட்சி, பேரூராட்சி மற்றும் நகராட்சி அமைப்புகள் மூலம் விரைவில் செயல்படுத்தப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்க்கு வரும் என கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory