» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியீடு: சென்னை மண்டலத்தில் 97.39 சதவீதம் தேர்ச்சி!

செவ்வாய் 13, மே 2025 12:28:32 PM (IST)

சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்புத் தேர்வில் சென்னை மண்டலத்தில் 97.39 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

நாடு முழுவதும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) கீழ் உள்ள பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் பிப்ரவரி மாதம் தொடங்கி ஏப்ரல் 4-ஆம் தேதியும் நிறைவடைந்தது. இந்த நிலையில் இன்று தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், மாணவர்களை விட 5.94 சதவீத மாணவிகள் அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். 

2025ல் மண்டல வாரியாக தேர்ச்சி சதவீதம்

விஜயவாடா - 99.60

திருவனந்தபுரம் - 99.32

சென்னை - 97.39

பெங்களூரு - 95.95

மேற்கு தில்லி - 95.37

கிழக்கு தில்லி - 95.06

சண்டீகர் - 91.61

பஞ்ச்குலா - 91.17

புணே - 90.93

அஜ்மீர் - 90.40

புவனேஸ்வர் - 83.64

குவஹாத்தி - 83.62

டேராடூன் - 83.45

பாட்னா - 82.86

போபால் - 82.46

நொய்டா - 81.29

பிரயாக்ராஜ் - 79.53

மண்டல வாரியாக விஜயவாடா முதலிடத்திலும், திருவனந்தபுரம் இரண்டாமிடத்தையும், சென்னை மூன்றாம் இடத்தையும் வகிக்கின்றன.

மாணவர்கள் தேர்வு முடிவுகளை cbseresults.nic.in, result.cbse.nic.in, cbse.gov.in என்ற இணையதளங்களில் அறிந்துகொள்ளலாம்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory